சேர்த்துக்கொள்ளும் கர்த்தர்

ஏசாயா 54:7 இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன்.
சங்கீதம் 27:10 என் தகப்பனும் தாயும் கைவிட்டாலும் கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்
யோவான் 14:3 அவரோடு சேர்த்துக்கொள்வார்.
லூக்கா 15:11-32 கெட்டக் குமாரனைப்போல சேர்த்துக்கொள்வார்
லூக்கா 13:34 கோழி தன் குஞ்சுகளைப்போல சேர்த்துக்கொள்ளும்...

1. சிதறிகிடக்கிறவரைச் சேர்த்துக்கொள்பவர்
உபாகமம் 30:3 உன் தேவனாகிய கர்த்தர் உன் சிறையிருப்பைத் திருப்பி, உனக்கு இரங்கி, உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிதற அடித்த எல்லா ஜனங்களிடத்திலும் இருக்கிற உன்னைத் திரும்பச் சேர்த்துக்கொள்வார்.
எசேக்கியேல் 20:41 நீங்கள் சிதறுண்டிருக்கிற தேசங்களிலிருந்து உங்களைச் சேர்த்துக்கொள்ளும்போது... பிரியமாயிருப்பேன்.  
எரேமியா 31:10 இஸ்ரவேலைச் சிதறடித்தவர் அதைச் சேர்த்துக்கொண்டு ஒரு மேய்ப்பன் தன் மந்தையைக் காக்கும்வண்ணமாக...

2. தள்ளுண்டவரைச் சேர்த்துக்கொள்பவர்
செப்பனியா 3:19,20 இதோ, அக்காலத்திலே உன்னைச் சிறுமைப்படுத்தின யாவரையும் தண்டிப்பேன்; நொண்டியானவனை இரட்சித்து, தள்ளுண்டவனைச் சேர்த்துக்கொள்வேன்.
ஆகாய் 2:23 செருபாபேல் என்னும் என் ஊழியக்காரனே, உன்னை நான் அந்நாளிலே சேர்த்துக்கொண்டு, உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன்.

3. இரட்சிக்கப்படுகிறவரைச் சேர்த்துக்கொள்பவர்
அப்போஸ்தலர் 2:47 (14-47) தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத் திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அனுதினமும் சபையிலே சேர்த்துக் கொண்டு வந்தார்.
ரோமர் 14:1 விசுவாசத்தில் பலவீனமுள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள் 
3யோவான் 1:8 நாம் சத்தியத்திற்கு உடன் வேலையாட்களாயிருக்கும்படி அப்படிப்பட்டவர்களைச் சேர்த்துக்கொள்ளக் கடனாளியாயிருக்கிறோம்
 

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download