யாத்திராகமம் 23:25 உஙகள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கட வீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்.
யாத்திராகமம் 15:26 நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.
1. விண்ணப்பத்தைக் கேட்டு வியாதியை குணமாக்கினார்
2இராஜாக்கள் 20:5(1-11) உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன். (எசேக்கியாவுக்கு 15 வருடம் கர்த்தர் ஆயுள் கூட்டினார்)
2நாளாகமம் 32:24 அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அவன் கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணும்போது, அவர் அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணி, அவனுக்கு ஒரு அற்புதத்தைக் கட்டளை யிட்டார்.
2. விருப்பத்தைக் கேட்டு வியாதியை குணமாக்கினார்
யோவான் 5:5-9 முப்பத்தெட்டு வருஷம் (38 வருஷம்) வியாதி கொண்டிருந்த ஒரு மனுஷன் அங்கே இருந்தான். படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதியஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார். இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார். உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி தன் படுக்கையை எடுத்துக் கொண்டு, நடந்துபோனான்.
3. விசுவாசத்தைக் கேட்டு வியாதியை குணமாக்கினார்
லூக்கா 7:2,9(1-10) அங்கே நூற்றுக்கு அதிபதியாகிய ஒருவனுக்குப் பிரியமான வேலைக்காரன் வியாதிப்பட்டு மரண அவஸ்தையாயிருந்தான். இயேசு இவைகளைக் கேட்டு அவனைக் குறித்து ஆச்சரியப்பட்டு, திரும்பி, தமக்குப் பின் செல்லுகிற திரளான ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்
Author: Rev. M. Arul Doss