முழு இருதயத்தோடு கர்த்தரைத் தேடுங்கள்

1. முழு இருதயத்தோடு கர்த்தரைத் தேடுங்கள் 
உபாகமம் 4:29 உன் தேவனாகிய கர்த்தரைத் தேடுவாய்; உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவரைத் தேடும்போது, அவரைக் கண்டடைவாய் 
எரேமியா 29:13 உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களா னால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்
சங்கீதம் 119:2 அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்.

2. முழு இருதயத்தோடு கர்த்தரைச் சேவியுங்கள் 
1சாமுவேல் 12:20,24 கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழு இருதயத்தோடும் சேவியுங்கள்... 
உபாகமம் 10:12 இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புகூர்ந்து, உன் முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து...

3. முழு இருதயத்தோடு கர்த்தரைத் துதியுங்கள் 
சங்கீதம் 9:1 கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன். 
சங்கீதம் 86:12 உம்மை என் முழு இருதயத்தோடும் துதித்து, உமது நாமத்தை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன்.
சங்கீதம் 111:1; சங்கீதம் 138:1 அல்லேலூயா, செம்மையானவர்களுடைய சங்கத்திலும் சபையிலும் கர்த்தரை முழு இருதயத்தோடும் துதிப்பேன்.

4. முழு இருதயத்தோடு கர்த்தரிடத்தில் திரும்புங்கள் 
உபாகமம் 30:10 கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் திரும்பும்போதும், கர்த்தர் உன் பிதாக்கள்மேல் சந்தோஷமாயிருந்ததுபோல, உன்மேலும் உனக்கு நன்மை உண்டாகத் திரும்பவும் சந்தோஷமாயிருப்பார். எரேமியா 24:7; யோவேல் 2:12

5. முழு இருதயத்தோடு கர்த்தரிடத்தில் அன்புகூருங்கள் 
உபாகமம் 6:5; உபாகமம் 11:13-15 உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு பலத்தோடும் அன்புகூருவாயாக  மத்தேயு 22:37 
Author: Rev. M. Arul Doss 



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download