திரும்புங்கள் கர்த்தரிடம்

எசேக்கியேல் 18:30 (21-30) இஸ்ரவேல் வம்சத்தாரே... கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீங்கள் மனந்திரும்புங்கள், உங்களுடைய எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புங்கள்
யோவேல் 2:12-13 நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருத யங்களைக்கிழித்து உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்புங்கள்
மல்கியா 3:7 என்னிடத்தில் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்கு திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

1. தீச்செயலை விட்டு திரும்புங்கள் (பாவங்கள், தீவினை)
எசேக்கியேல் 18:21 துன்மார்க்கன் தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என் கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை.
1இராஜாக்கள் 8:35(33-40) தங்கள் பாவங்களை விட்டுத் திரும்பினால், பரலோகத்தில் இருக்கிற தேவன் மழையைக் கட்டளையிடுவாராக
ஏசாயா 44:22 என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்

2. தீய வழியை விட்டு திரும்புங்கள் (துன்மார்க்கம், பொல்லா)
எசேக்கியேல் 18:27 துன்மார்க்கன் தான் செய்த துன்மார்க்கத்தைவிட்டு விலகி, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் தன் ஆத்துமாவைப் பிழைக்கப்பண்ணுவான்.
2நாளாகமம் 7:14 பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால் பாவத்தை மன்னித்து அவர்கள் தேசத்துக்கு சேமத்தைக் கொடுப்பார்.
யோனா 3:10 நினிவே மக்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினர்
சகரியா 1:4 பொல்லாத கிரியைகளைவிட்டுத் திரும்புங்கள்

3. தீமையை விட்டு திரும்புங்கள் (குற்றம்,மீறுதல்,தீங்கு,வஞ்சம்)
எசேக்கியேல் 18:30 இஸ்ரவேல் வம்சத்தாரே, நான் உங்களில் அவன வனை அவனவன் வழிகளுக்குத் தக்கதாக நியாயந்தீர்ப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீங்கள் மனந்திரும்புங்கள், உங்களுடைய எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புங்கள்; 
ஏசாயா 59:20 மீட்பர் சீயோனுக்கும், யாக்கோபிலே மீறுதலைவிட்டுத் திரும்புகிறவர்களுக்கும் வருவார் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Author: Rev. M. Arul Doss .



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download