1இராஜாக்கள் 8:33-40

8:33 உம்முடைய ஜனங்களாகிய இஸ்ரவேலர் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்ததினிமித்தம் சத்துருவுக்கு முன்பாக முறிந்துபோய், உம்மிடத்திற்குத் திரும்பி, உம்முடைய நாமத்தை அறிக்கைபண்ணி, இந்த ஆலயத்துக்கு நேராக உம்மை நோக்கி விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் செய்தால்,
8:34 பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தை மன்னித்து, அவர்கள் பிதாக்களுக்கு நீர் கொடுத்த தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவீராக.
8:35 அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்ததினால் வானம் அடைபட்டு மழைபெய்யாதிருக்கும்போது, அவர்கள் இந்த ஸ்தலத்திற்கு நேராக விண்ணப்பஞ்செய்து, உம்முடைய நாமத்தை அறிக்கைபண்ணி, தங்களை தேவரீர் கிலேசப்படுத்துகையில் தங்கள் பாவங்களை விட்டுத் திரும்பினால்,
8:36 பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, உமது அடியாரும் உமது ஜனமாகிய இஸ்ரவேலும் செய்த பாவத்தை மன்னித்து, அவர்கள் நடக்கவேண்டிய நல்வழியை அவர்களுக்குப் போதித்து, தேவரீர் உமது ஜனத்திற்குச் சுதந்தரமாகக் கொடுத்த உமது தேசத்தில் மழைபெய்யக் கட்டளையிடுவீராக.
8:37 தேசத்திலே பஞ்சம் உண்டாகிற போதும், கொள்ளைநோய் உண்டாகிற போதும், வறட்சி, சாவி, வெட்டுக்கிளி, பச்சைக்கிளி உண்டாகிறபோதும், அவர் சத்துருக்கள் தேசத்திலுள்ள பட்டணங்களை முற்றிக்கைபோடுகிறபோதும், யாதொரு வாதையாகிலும் யாதொரு வியாதியாகிலும் வருகிறபோதும்,
8:38 உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் அனைவரிலும் எந்த மனுஷனானாலும் தன் இருதயத்தின் வாதையை உணர்ந்து, இந்த ஆலயத்துக்கு நேராகத் தன் கைகளை விரித்துச் செய்யும் சகல விண்ணப்பத்தையும், சகல வேண்டுதலையும்,
8:39 உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு மன்னித்து,
8:40 தேவரீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குப் பயப்படும்படிக்கு தேவரீர் ஒருவரே எல்லா மனுபுத்திரரின் இருதயத்தையும் அறிந்தவராதலால், நீர் அவனவன் இருதயத்தை அறிந்திருக்கிறபடியே, அவனவனுடைய வழிகளுக்குத்தக்கதாகச் செய்து, அவனவனுக்குப் பலன் அளிப்பீராக.




Related Topics


உம்முடைய , ஜனங்களாகிய , இஸ்ரவேலர் , உமக்கு , விரோதமாய்ப் , பாவஞ்செய்ததினிமித்தம் , சத்துருவுக்கு , முன்பாக , முறிந்துபோய் , உம்மிடத்திற்குத் , திரும்பி , உம்முடைய , நாமத்தை , அறிக்கைபண்ணி , இந்த , ஆலயத்துக்கு , நேராக , உம்மை , நோக்கி , விண்ணப்பத்தையும் , வேண்டுதலையும் , செய்தால் , , 1இராஜாக்கள் 8:33 , 1இராஜாக்கள் , 1இராஜாக்கள் IN TAMIL BIBLE , 1இராஜாக்கள் IN TAMIL , 1இராஜாக்கள் 8 TAMIL BIBLE , 1இராஜாக்கள் 8 IN TAMIL , 1இராஜாக்கள் 8 33 IN TAMIL , 1இராஜாக்கள் 8 33 IN TAMIL BIBLE , 1இராஜாக்கள் 8 IN ENGLISH , TAMIL BIBLE 1KINGS 8 , TAMIL BIBLE 1KINGS , 1KINGS IN TAMIL BIBLE , 1KINGS IN TAMIL , 1KINGS 8 TAMIL BIBLE , 1KINGS 8 IN TAMIL , 1KINGS 8 33 IN TAMIL , 1KINGS 8 33 IN TAMIL BIBLE . 1KINGS 8 IN ENGLISH ,