சங்கீதம் 118:6; எபிரெயர் 13:6 கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்?
சங்கீதம் 56:1-11தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்
ஏசாயா 12:2 தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கை யாயிருப்பேன்; ஏசாயா 41:10,13,14; ஏசாயா 43:5; புலம்பல் 3:57
1. பாடுகளுக்குப் பயப்படாதிருங்கள்
வெளிப்.2:10 நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே, பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மை யாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன். 1பேதுரு 3:14-15
2. நோய்களுக்குப் பயப்படாதிருங்கள்
சங்கீதம் 91:6 இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய்.
3. பொல்லாப்புக்குப் பயப்படாதிருங்கள்
சங்கீதம் 23:6 நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.
4. பஞ்சங்களுக்குப் பயப்படாதிருங்கள்
ஆதியாகமம் 50:21 பயப்படாதிருங்கள்; நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன் என்று, யோசேப்பு பட்சமாய் பேசினான்.
1இராஜாக்கள் 17:13 எலியா சாறிபாத் விதவையைப் பார்த்து: பயப்படாதே; நீ போய் உன் வார்த்தையின்படி ஆயத்தப்படுத்து...
5. யுத்தங்களுக்குப் பயப்படாதிருங்கள்
சங்கீதம் 3:1-8 எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம்பேருக்கு நான் பயப்படேன்
சங்கீதம் 27:3 எனக்கு விரோதமாக ஒரு பாளயமிறங்கினாலும், என் இருதயம் பயப்படாது; என்மேல் யுத்தம் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாயிருப்பேன்
லூக்கா 21:9 யுத்தங்களைக்குறித்து கேள்விப்படும்போது, பயப்படாதிருங்கள்
யாத்திராகமம் 14:13-14 மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள் இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்;
உபாகமம் 3:22; உபாகமம் 7:21; 2இராஜாக்கள் 6:16 ஏசாயா 41:10-13
Author: Rev. M. Arul Doss