1. அந்திரேயாவின் பிறப்பும், இறப்பும்
புனித அந்திரேயா அல்லது புனித பெலவேந்திரர் (நஹண்ய்ற் அய்க்ழ்ங்ஜ்) என்பவர் இயேசு கிறிஸ்து ஏற்படுத்திய பன்னிரு சீடர்களுள் ஒருவர். இவர் புனித பேதுருவின் சகோதரர்.
இவருடைய பிறப்பு கி.பி 1 பெத்சாயிதா; இறப்பு கி:பி. 1 பத்ராஸ் இவர் ல வடிவிலான சிலுவையில் அறையப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
2. அந்திரேயாவின் அழைப்பும், உழைப்பும்
மத்தேயு 4:18-19; மாற்கு 1:16-18 இயேசு முதன்முதலாக சீடராக பேதுருவை அழைத்தவுடன் இவரையும் அழைத்தார். என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரை பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்
யோவான் 1:35-37 மறுநாளிலே யோவான்ஸ்நானனும் அவனுடைய சீடரில் இரண்டு பேரும் நிற்கும்போது, இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான். அவன் அப்படிச் சொன்னதை அவ்விரண்டு சீடருங்கேட்டு, இயேசுவுக்குப் பின்சென்றார்கள்.
யோவான் 1:38-39 இயேசுவுக்கு பின் செல்லுகிறதைக் கண்டு: என்னத் தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள் ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் கள் என்று கேட்டு, அவரோடு அங்கே தங்கினர்.
யோவான் 1:40 பிறகு யோவான்ஸ்நானன் சொன்னதைக்கேட்டு, அவருக்குப் பின் சென்ற இரண்டுபேரில் இவனும் ஒருவன்
யோவான் 1:42 தன் சகோதரன் பேதுருவை இயேசுவிடம் அழைத்து வந்தார்.
யோவான் 2:1 கானாவூர் திருமணத்திற்கு இயேசுவோடு வந்திருந்தார்
யோவான் 6:8 அப்பங்களை பருகச் செய்த போது, ஒரு சிறுவனிடம் ஐந்து அப்பமும், இரண்டு மீன்களும் உள்ளதென்று சொன்னவர் இவரே.
3. அந்திரேயாவின் ஊழியமும், ஜீவியமும்
மாற்கு 13:1-4 இயேசு ஆலயத்தின் அழிவைக் குறித்து அதாவது, ஒரு கல்லின்மேல் ஒரு கல் இராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுபோகும் என்றார். இவைகள் எப்பொழுது சம்பவிக்கும் என்று கேட்டவர் இவரே
யோவான் 12:20-22 கிரேக்கர்கள் இயேசுவை காண விரும்புகிறோம் என்று பிலிப்புவிடம் சொன்னபோது, அதை அந்திரேயாவுக்கு அறிவித்தான். பிறகு அந்திரேயாவும் பிலிப்புவும் அதை இயேசுவுக்கு அறிவித்தார்கள்
Author: Rev. M. Arul Doss