ஒன்றாயிருக்க விரும்பும் கிறிஸ்து

1. கிறிஸ்துவைப்போல ஒன்றாயிருங்கள்
யோவான் 17:11  நான் இனி உலகத்தில் இரேன், இவர்கள் உலகத்தில் இருக்கிறார்கள்; நான் உம்மிடத்தில் வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீ அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்.
1கொரிந்தியர் 12:12-13(1-27) சரீரம் ஒன்று அதற்கு அவயவங்கள் அநேகம்; ஒரே சரீரத்தின் அவயவங்களெல்லாம் அநேகமாயிருந்தும் சரீரம் ஒன்றாகவேயிருக்கிறது; அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார். நாம் எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ் நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப் பட்டோம்

2. கிறிஸ்துவுக்குள் ஒன்றாயிருங்கள்
யோவான் 17:21  அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.
கலாத்தியர் 3:18-28 யூதனென்றும் கிரேக்கனென்றும் இல்லை, அடிமை யென்றும் சுயாதீனனென்றும் இல்லை; ஆணென்றும் பெண்ணென்றும் இல்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.
யோவான் 10:30  நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்.

3. கிறிஸ்துவுக்காக ஒன்றாயிருங்கள்
யோவான் 17:22 நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும் படி நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.
யோவான் 11:52 (41-52) சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கபோகிறாரென்றும் தீர்க்கத்தரிசன மாய்ச் சொன்னான். 
எபேசியர் 2:14 (12-18) அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத் தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படி சமாதானம்பண்ணி, ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.
Author: Rev. M. Arul Doss



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download