பரிசுத்தராயிருங்கள்

1பேதுரு 1:15-16 உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகள் எல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்
லேவியராகமம் 19:2(1-4); எபிரெயர் 12:14

1. உடலில் பரிசுத்தம் (கண், காது, கரம், கால், வாய்)
ரோமர் 12:1 அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.  1தெசலோனிக்கேயர் 4:1-7; சங்கீதம் 24:3-4

2. உள்ளத்தில் பரிசுத்தம் (சிந்தை, எண்ணம், மனம், இதயம்)
யாக்கோபு 4:8 தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களி டத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்.
1பேதுரு 3:15 கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம் பண்ணுங்கள்.

3. உணர்வில் பரிசுத்தம் (பாசம், நேசம், சிநேகம், காதல்)
எபேசியர் 1:1-8 தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களாயிருப்பதற்கு, அவர் உலகத் தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே...

4. உறவில் பரிசுத்தம் (சொந்தம், பந்தம், நட்பு)
1தெசலோனிக்கேயர் 5:23-26  சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்ற மற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. சகோதரரெல்லாரையும் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள்.

5. உடையில் பரிசுத்தம் (அங்கி, ஆடை, வஸ்திரம்)
யாத்திராகமம் 40:1-16 ஆரோனுக்குப் பரிசுத்த வஸ்திரங்களை உடுத்தி, எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு அவனை அபிஷேகம்பண்ணி, அவனைப் பரிசுத்தப்படுத்துவாயாக.
யாத்திராகமம் 28:1-8

Author: Rev. M. Arul Doss .



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download