ஏற்றுக்கொள்ளும் கிறிஸ்து

1. பாடுகளை ஏற்றுக்கொள்ளும் கிறிஸ்து
ஏசாயா 53:4-5; மத்தேயு 8:17 மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்... நம்முடைய மீறுதல் களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்
வெளிப். 2:10 நீ படப்போகிற பாடுகளைக் குறித்து எவ்வளவும் பயப்படாதே; நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவ கிரீடத்தை உனக்குத் தருவேன்
2தீமோத்தேயு 1:12 நான் இந்தப் பாடுகளைகளையும் அனுபவிக்கிறேன்; ஆயினும், நான் வெட்கப்படுகிறதில்லை 
2தீமோத்தேயு 2:12 அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்

2. பாவிகளை ஏற்றுக்கொள்ளும் கிறிஸ்து
லூக்கா 15:1-32 பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள். 
காணாமற்போன ஆடு, காணாமற்போன காசு, காணாமற்போன மகன் உவமைகளை உதாரணமாக இயேசு  சொல்லுகிறார்
மத்தேயு 9:10-13 நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிற தற்கு அழைக்கவந்தேன் என்றார். 
1தீமோத்தேயு 1:15 பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு வந்தார்
சங்கீதம் 25:8 கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்.

3. பாரங்களை ஏற்றுக்கொள்ளும் கிறிஸ்து
மத்தேயு 11:28 வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்
சங்கீதம் 55:22 கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை தள்ளாடவொட்டார்
யோவான் 6:37 என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை 
கலாத்தியர் 6:2 ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவி னுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்.
Author: Rev. M. Arul Doss 



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download