கர்த்தர் ஒருவருக்கே ஆராதனை செய்யுங்கள்

தானியேல் 3:17-18 நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புக்க வல்லவராயிருக்கிறார்... விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும் நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்ளுவதுமில்லை 

1. இருதயத்தை நேராக்கி ஆராதனை செய்யுங்கள்
1சாமுவேல் 7:3-4 உங்கள் இருதயத்தைக் கர்த்தருக்கு நேராக்கி, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்யுங்கள் என்றான்; அவர்கள் கர்த்தருக்கே ஆராதனை செய்தார்கள் 
உபாகமம் 6:12-13 கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு. உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவருக்கே ஆராதனை செய்து...
நியாயாதிபதிகள் 10:16 இஸ்ரவேல் புத்திரர் அந்நிய தேவர்களை விலக்கிவிட்டு, கர்த்தருக்கு ஆராதனை செய்தார்கள் 

2. உள்ளத்தை மகிழ்ச்சியாக்கி ஆராதனை செய்யுங்கள்
சங்கீதம் 100:2,4 (1-5) மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனை செய்து, ஆனந்த சத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்... அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிரகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்தரியுங்கள்

3. சரீரத்தை பரிசுத்தமாக்கி ஆராதனை செய்யுங்கள்
ரோமர் 12:1 சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலீயாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளு கிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை 

4. மனதை ஒருமனமாக்கி ஆராதனை செய்யுங்கள்
செப்பனியா 3:9 கர்த்தருடைய நாமத்தை தொழுதுகொண்டு, ஒருமனப் பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு, நான் அவர்கள் பாஷையை சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன். 

5. நேரத்தை ஒதுக்கி ஆராதனை செய்யுங்கள்
லூக்கா 2:37 84 வயதுள்ள அன்னாள் தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும்பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்து கொண்டி...
தானியேல் 6:10,16,20 தானியேல் தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முôங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்

Author: Rev. M. Arul Doss 



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download