புத்தியுள்ளவர்களும், புத்தியில்லாதவர்களும்

1பேதுரு 5:8-11  தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.
நீதிமொழிகள் 2:6; நீதிமொழிகள் 3:1-4 

1. புத்தியுள்ள மனுஷன், புத்தியில்லாத மனுஷன்
மத்தேயு 7:24-25 ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலை யின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.
பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.
மத்தேயு 7:26-27 நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டைக் மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது, அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.

2. புத்தியுள்ள கன்னிகை, புத்தியில்லாத கன்னிகை
மத்தேயு 25:1-14 பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப்புறப்பட்ட பத்துக்கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும். அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள்.
மத்தேயு 25:4 புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள்.
மத்தேயு 25:3 புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக் கொண்டுபோனார்கள்.எண்ணெயையோ கூடக்கொண்டுபோகவில்லை.

3. புத்தியுள்ள ஸ்திரீ, புத்தியில்லாத ஸ்திரீ
நீதிமொழிகள் 14:1 புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்
நீதிமொழிகள் 19:14 புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு
நீதிமொழிகள் 14:1 புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துபோடுகிறாள்

Author: Rev. M. Arul Doss .



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download