1. அடையைக் கொடுத்த உள்ளம்
1 இராஜாக்கள் 17:8-16 சாறிபாத் விதவை தேவ மனுஷனாகிய எலியா வுக்கு தனக்கு இருந்த அடையைக் கொடுத்தாள். அதின் மூலம் பானை யிலே மா செலவழிந்து போகவும் இல்லை; கலசத்தில் எண்ணெய் குறைந்துபோகவும் இல்லை.
2. அப்பத்தைக் கொடுத்த உள்ளம்
யோவான் 6:1-13 இயேசுவின் வசனத்தைக் கேட்க வந்த 5000- க்கும் அதிகமான மக்களைப் போஷிக்க ஒரு சிறுவன் 5 கோதுமை அப்பங் களும் 2 மீன்களும் கொடுத்தான். அதை ஆண்டவர் ஆசீர்வதித்து மக்களுக்கும் சீடர்களுக்கும் கொடுத்தார்.
3. காணிக்கையைக் கொடுத்த உள்ளம்
லூக்கா 21:1-4 ஒரு ஏழை விதவை வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள். அதை இயேசு மற்றெல் லாரைப்பார்க்கிலும் அதிகமாய் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
4. காணியாட்சியைக் கொடுத்த உள்ளம் (நிலத்தை)
அப்போஸ்தலர் 4:36,37 ஆறுதல் மகன் என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா என்னும் யோசே தனக்கு உண்டாயிருந்த நிலத்தை விற்று, அதன் கிரயத் தைக் கொண்டு வந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்.
5. பொருட்களைக் கொடுத்த உள்ளம்
1நாளாகமம் 29:1-15 தாவீது அரசன்: என் தேவனுடைய ஆலயத்தின்மேல் நான் வைத்திருக்கிற வாஞ்சையினால், பரிசுத்த ஆலயத்துக்காக நான் சவதரித்த அனைத்தையும் தவிர, எனக்குச் சொந்தமான பொன்னையும் வெள்ளியும்... கொடுக்கிறேன்.
6. பிள்ளையைக் கொடுத்த உள்ளம்
ஆதியாகமம் 22:1-18 ஆபிரகாம் தன் ஒரே மகனைக் கொடுக்க துணிந்தான்
1சாமுவேல் 1:28 சாமுவேலை கர்த்தருடைய ஆலயத்தில் விட்ட அன்னாள்
நியாயாதிபதிகள் 11:29-40 யெப்தா தன் ஒரே மகளைப் பலியிட்டான்.
7. ஜீவனைக் கொடுத்த உள்ளம்
யோவான் 3:16; 1யோவான் 3:16 தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனைக் கொடுத்து, உலகத்தில் இவ்வளவாய் அன்புகூர்ந்தார்.
யோவான் 10:11,15 ஆடுகளுக்காக தன் ஜீவனையே கொடுத்த மேய்ப்பன்
Author: Rev. M. Arul Doss