சங்கீதம் 29:11 கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன் கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.
யோவான் 14:27; யோவான் 16:33 இயேசு கிறிஸ்து; நியாயாதிபதிகள் 6:23 (12-24) கிதியோன்; மத்தேயு 5:5; எபேசியர் 2:14 (13-18); மீகா 5:4-5
1. இருதயத்தில் சமாதானம்
கொலோசெயர் 3:15 (12-17) தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதல் உள்ளவர்களாயிருங்கள். பிலிப்பியர் 4:7(1-7)
2. இல்லத்தில் சமாதானம்
லூக்கா 10:5-6 ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாக என்று முதலாவது சொல்லுங்கள்.
லூக்கா 24:36; லூக்கா 20:19,26 சீடர்களுக்கு சமாதானம்
3. அலங்கத்தில் சமாதானம்
சங்கீதம் 122:7(6-9) உன் அலங்கத்திற்குள்ளே (மதிலுக்குள்ளே) சமாதான மும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக
4. ஆலயத்தில் சமாதானம்
அப்போஸ்தலர் 9:31 யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளில் எங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்தி விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப் படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின
5. தேசத்தில் சமாதானம்
லேவியராகமம் 26:6(1-12) தேசத்தில் சமாதானம் கட்டளையிடுவேன்; தத்தளிக்கப்பண்ணுவார் இல்லாமல் படுத்துக்கொள்வீர்கள்; துஷ்ட மிருகங்களைத் தேசத்தில் இராதபடிக்கு ஒழியப்பண்ணுவேன்; பட்டயம் உங்கள் தேசத்தில் உலாவுவதில்லை
சங்கீதம் 125:5; எண்ணாகமம் 6:22-27 இஸ்ரவேலுக்கு சமாதானம்
சகரியா 9:10 ஜாதிகளுக்கு சமாதானம்; ஏசாயா 54:13 பிள்ளைகளுக்கு சமாதானம்; சங்கீதம் 122:8 சகோதரர்களுக்கு சமாதானம்; சங்கீதம் 37:37 உத்தமனுக்கு சமாதானம்; சங்கீதம் 119:165 வேதத்தை நேசிப்பவர்களுக்கு சமாதானம்
Author: Rev. M. Arul Doss