கொலோசெயர் 3:12-17

3:12 ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு;
3:13 ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
3:14 இவை எல்லாவற்றின்மேலும், பூரணசற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
3:15 தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்.
3:16 கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி;
3:17 வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.




Related Topics


ஆகையால் , நீங்கள் , தேவனால் , தெரிந்துகொள்ளப்பட்ட , பரிசுத்தரும் , பிரியருமாய் , உருக்கமான , இரக்கத்தையும் , தயவையும் , மனத்தாழ்மையையும் , சாந்தத்தையும் , நீடிய , பொறுமையையும் , தரித்துக்கொண்டு; , கொலோசெயர் 3:12 , கொலோசெயர் , கொலோசெயர் IN TAMIL BIBLE , கொலோசெயர் IN TAMIL , கொலோசெயர் 3 TAMIL BIBLE , கொலோசெயர் 3 IN TAMIL , கொலோசெயர் 3 12 IN TAMIL , கொலோசெயர் 3 12 IN TAMIL BIBLE , கொலோசெயர் 3 IN ENGLISH , TAMIL BIBLE Colossians 3 , TAMIL BIBLE Colossians , Colossians IN TAMIL BIBLE , Colossians IN TAMIL , Colossians 3 TAMIL BIBLE , Colossians 3 IN TAMIL , Colossians 3 12 IN TAMIL , Colossians 3 12 IN TAMIL BIBLE . Colossians 3 IN ENGLISH ,