யோவேல் 1:14, 2:15-16 பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள்; விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்; ஜனத்தைக் கூட்டுங்கள். சபையைப் பரிசுத்தப் படுத்துங்கள்.
1. உகந்த உபவாசம்
ஏசாயா 58:7(1-14) பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கி றதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகி றதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங்கொடுக்கி றதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்.
2. தகுந்த உபவாசம்
மத்தேயு 6:16--18 நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரரைப்போல முக வாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும் பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்;
நீயோ உபவாசிக்கும்போது, இந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப் படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு.
3. மிகுந்த உபவாசம்
அப்போஸ்தலர் 10:30(1-33) நூற்றுக்கதிபதியாகிய கொர்நேலியு தேவபக்தியுள் ளவனும் தன் வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தான்.
லூக்கா 2:36-38 ஏறக்குறைய 84 வயதுள்ள அந்த விதவை தேவலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள்.
2நாளாகமம் 20:3 யோசபாத் யூதாவெங்கும் உபவாசத்தை கூறினான்.
நெகேமியா 1:4 நெகேமியா எருசலேமுக்காக அழுது, துக்கித்து, உபவா சித்து, மன்றாடி, பரலோகத்தின் தேவனை நோக்கி:
யோனா 3:5-10 நினிவே ராஜாவும், நினிவே மக்களும், பிரதானிகளும், மிருக ஜீவன்களும் ஒன்றும் சாப்பிடாமல் உபவாசமிருந்தார்கள்.
Author: Rev. M. Arul Doss