வெளிப். 1:8 இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்ல மையுள்ள கர்த்தர்; நான் அல்பாவும், ஓமேகாவும், ஆதியும் அந்தமுமாயி ருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.
1. கர்த்தருடைய சமாதானத்துக்கு முடிவில்லை
ஏசாயா 9:1-7 தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தை யும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்ததுவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை
யோவான் 14:27 சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்.
மீகா 5:4-5 அவர் இனி பூமியின் எல்லைகள் பரியந்தமும் மகிமைப்படுவார். இவரே சமாதான காரணர்...
எபேசியர் 2:13-16 அவரே நம்முடைய சமாதான காரணராகி, இரு திறத்தாரையும் ஒன்றாக்கி... ஒப்புரவாக்கினார்.
2. கர்த்தருடைய இரக்கத்துக்கு முடிவில்லை
புலம்பல் 3:17-26 நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.
சங்கீதம் 25:6 கர்த்தாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய காருணியங்களையும் நினைத்தருளும், அவைகள் அநாதி காலமுதல்...
சங்கீதம் 119:156 உம்முடைய இரக்கங்கள் மிகுதியாயிருக்கிறது
எபேசியர் 2:4-5 தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய்
மத்தேயு 5:7 இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள் இரக்கம்பெறுவார்கள்
3. கர்த்தருடைய இராஜ்யத்துக்கு முடிவில்லை
லூக்கா 1:27-33அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக் கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது
தானியேல் 6:25-27 அவர் ஜீவனுள்ள தேவன், அவர் என்றென்றைக் கும் நிலைத்திருக்கிறவர்; அவருடைய ராஜ்யம் அழியாதது; அவருடைய கர்த்தத்துவம் முடிவுபரியந்தமும் நிற்கும்
லூக்கா 22:29-30 என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினது போல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன்...
லூக்கா 12:32 பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்
Author: Rev. M. Arul Doss