2பேதுரு 3:1-14 தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத் தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்
1. கர்த்தருடைய வருகை தாமதிப்பதில்லை
எபிரெயர் 10:36-37 நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படிசெய்து, வாக்குத் தத்தம் பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது. வருகிறவர் இன்னுங்கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம்பண்ணார்
வெளிப். 3:11; வெளிப். 22:7,12;20 இதோ, சீக்கிரமாய் வருகிறேன்
2. கர்த்தருடைய வார்த்தை தாமதிப்பதில்லை
எசேக்கியேல் 12:24-28 நான் கர்த்தர், நான் சொல்லுவேன், நான் சொல்லும் வார்த்தை நிறைவேறும்; இனித் தாமதியாது; கலகவீட்டாரே, உங்கள் நாட்களிலே நான் வார்த்தையைச் சொல்லுவேன், அதை நிறைவேறவும் பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்
ஏசாயா 55:10-11 என் வாயில் இருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்பு கிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.
3. கர்த்தருடைய தரிசனம் தாமதிப்பதில்லை
ஆபகூக் 2:1-4 குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை தானியேல் 10:14
4. கர்த்தருடைய இரட்சிப்பு தாமதிப்பதில்லை
ஏசாயா 46:13 என் நீதியைச் சமீபிக்கப்பண்ணுகிறேன், அது தூரமாயிருப் பதில்லை; என் இரட்சிப்புத் தாமதிப்பதில்லை; நான் சீயோனில் இரட்சிப் பையும், இஸ்ரவேலுக்கு என் மகிமையையும் கட்டளையிடுவேன்.
சங்கீதம் 40:17; சங்கீதம் 70:5 நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார்; தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர்; என் தேவனே, தாமதியாதேயும்.
சங்கீதம் 14:7; சங்கீதம் 53:6; சங்கீதம் 62:1; புலம்பல் 3:26
Author: Rev. M. Arul Doss