காசு(க்காக) செய்த மோசம்

1. காசுக்காக விற்றுப்போட்ட சகோதரர் (20 வெள்ளி காசு) 
ஆதியாகமம் 37:28(18-36) அந்த வர்த்தகரான மீதியானியர் கடந்துபோகிற போது, அவர்கள் யோசேப்பை அந்தக் குழியில் இருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட் டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டுபோனார்கள்.
ஆதியாகமம் 37:36 அந்த மீதியானியர் எகிப்திலே பார்வோனின் பிரதானி யும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்பவனிடத்தில் விற்றார்கள்.

2. காசுக்காக கட்டிப்போட்ட தெலீலாள் (1100 வெள்ளி காசு) 
நியாயதிபதிகள் 16:5 (1-21) அவளிடத்திற்குப் பெலிஸ்தரின் அதிபதிகள் போய்: நீ அவனை (சிம்சோன்) நீ அவனை நயம்பண்ணி, அவனுடைய மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்றும், நாங்கள் அவனைக் கட்டிச் சிறுமைப்படுத்துகிறதற்கு எதினாலே அவனை மேற்கொள்ளலாம் என்றும் அறிந்தகொள்; அப்பொழுது நாங்கள் ஒவ்வொருவரும் ஆயிரத்து நூறு வெள்ளிக்காசு உனக்குக் கொடுப்போம் என்றார்கள்.
நியாயதிபதிகள் 16:8 அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் உலராத பச்சையான ஏழு அகணிநார்க் கயிறுகளை அவளிடத்திற்குக் கொண்டு வந்தார்கள்; அவைகளால் அவள் அவனைக் கட்டினாள்.
நியாயதிபதிகள் 16:12 அப்பொழுது தெலீலாள், புதுக்கயிறுகளை வாங்கி, அவைகளால் அவனைக் கட்டி: 
நியாயதிபதிகள் 16:13 ஏழுஜடைகளை நெசவுநூல் பாவோடே பின்னி விட்டால் ஆகும் என்றான்

3. காசுக்காக காட்டிக்கொடுத்த யூதாஸ் (30 வெள்ளி காசு) 
மத்தேயு 26:15(14-25) நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள்.
மத்தேயு 27:3-4(1-10) அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியரி டத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக்கொண்டுவந்து: குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான்.

Author: Rev. M. Arul Doss



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download