மத்தேயு 27:1-10

27:1 விடியற்காலமானபோது, சகல பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனைபண்ணி,
27:2 அவரைக் கட்டி, கொண்டுபோய், தேசாதிபதியாகிய பொந்தியு பிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள்.
27:3 அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியத்திடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து:
27:4 குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள்.
27:5 அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான்.
27:6 பிரதான ஆசாரியர் அந்த வெள்ளிக்காசை எடுத்து: இது இரத்தக்கிரயமானதால், காணிக்கைப் பெட்டியிலே இதைப்போடலாகாதென்று சொல்லி,
27:7 ஆலோசனைபண்ணின பின்பு, அந்நியரை அடக்கம்பண்ணுவதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே கொண்டார்கள்.
27:8 இதினிமித்தம் அந்த நிலம் இந்நாள் வரைக்கும் இரத்தநிலம் என்னப்படுகிறது.
27:9 இஸ்ரவேல் புத்திரரால் மதிக்கப்பட்டவருக்குக் கிரயமாகிய முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து,
27:10 கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று.




Related Topics


விடியற்காலமானபோது , சகல , பிரதான , ஆசாரியரும் , ஜனத்தின் , மூப்பரும் , இயேசுவைக் , கொலைசெய்யும்படி , அவருக்கு , விரோதமாக , ஆலோசனைபண்ணி , , மத்தேயு 27:1 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 27 TAMIL BIBLE , மத்தேயு 27 IN TAMIL , மத்தேயு 27 1 IN TAMIL , மத்தேயு 27 1 IN TAMIL BIBLE , மத்தேயு 27 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 27 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 27 TAMIL BIBLE , Matthew 27 IN TAMIL , Matthew 27 1 IN TAMIL , Matthew 27 1 IN TAMIL BIBLE . Matthew 27 IN ENGLISH ,