அதிகாரம் 1: பஞ்சம், இறப்பு, இடம்பெயர்வுமற்றும்வெறுமை (1: 1–22)
இது நியாயாதிபதிகளின் 400 ஆண்டுகால ஆட்சியின் முடிவில் நடந்தது. அது சட்டவிரோதம், அடக்குமுறை மற்றும் அராஜகம் நிறைந்த காலம் என குறிப்பிடப்படுகிறது. அந்த நேரத்தைப் பற்றிய சோகமான வர்ணனை என்னவென்றால்: ஒவ்வொருவரும் தங்களுக்கு விருப்பமான அல்லது சரியானதைச் செய்தார்கள். (நியாயாதிபதிகள்17: 6; 18: 1; 19: 1; 21:25)
துயர இடம்பெயர்வு
நகோமி மற்றும் எலிமெலேக்கு மற்றும் அவர்களின் இரண்டு மகன்களுடன் (மக்லோன்மற்றும்கிலியோன்) பெத்லகேமில் இருந்து மோவாபிற்கு இஸ்ரேலில் வறட்சி மற்றும் பஞ்சத்திற்கு பயந்து குடியேற முடிவு செய்கிறார்கள். (ரூத் 1: 1-3) அதுசுமார் 30 மைல் பயண தூரம் உள்ள நகரம். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தைவிட்டு வெளியேறி, தேவைக்கான மற்றும் செழிப்புக்கான கனவுகளோடு அவர்கள் மோவாப் தேசத்திற்கு போனார்கள். அவர்கள் தேவ நியாயப் பிரமாணத்திற்குக் கீழ்ப்படிந்தால், அந்த தேசத்தில் போதுமான தானியங்கள் இருக்கும் என்று தேவன் வாக்குறுதி அளித்திருந்தார். (உபாகமம் 11: 13-17) பஞ்சம் இஸ்ரேல் தேசத்தின் கீழ்ப்படியாமையின் விளைவாகும்.
மூன்று விதவைகளின்
விளைவு பேரழிவத் தந்தது. எலிமெலேக்கு இஸ்ரவேலுக்கு திரும்பவில்லை. தங்கள் வறுமையும் துரதிர்ஷ்டமும் புலம்பெயர்வதால் முடிவடையும் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனாலும், அவை மோவாப்பிலும் அவர்களைப் பின்தொடர்ந்தன. மன உறுதியும் நம்பிக்கையும் கொண்ட பெண்மணி நகோமி, தனது இரண்டு மகன்களுக்கும் திருமணம் செய்து வைத்தார். ஐயோ, இரண்டு மகன்களும் இறந்தனர். கணவரை அடக்கம் செய்வது மிகவும் கடினம். இரண்டு குழந்தைகளை அடக்கம்செய்வது, இன்னும் கடினமான காரியம். தேவன் அவளை கைவிட்டதாக அவள் நினைத்தாள்.
நகோமி, ஒர்பாள் மற்றும் ரூத் மூன்று விதவைகள் கொண்ட குழுவாக மாறினர். வருமானம், சொத்து, அடையாளம் மற்றும் நம்பிக்கை இல்லாமல், நகோமி இஸ்ரவேலுக்கு செல்ல முன்முயற்சி எடுக்கிறார். இஸ்ரேலில் மழை மற்றும் அறுவடை பற்றி அவள் கேள்விப்படுகிறாள், நகோமி இஸ்ரவேலுக்குத் திரும்ப முடிவு செய்கிறாள். இது (தலைகீழ்) மீள்-இடம்பெயர்வு என்று அழைக்கப்படலாம்.
மருமகள் மீதான அணுகுமுறை
நகோமி தன் இரண்டு மருமக்களையும் நோக்கி: நீங்கள் இருவரும் உங்கள் தாய்வீட்டுக்குத் திரும்பிப்போங்கள்; மரித்துப்போனவர்களுக்கும் எனக்கும் நீங்கள் தயைசெய்ததுபோல, கர்த்தர் உங்களுக்கும் தயைசெய்வாராக.கர்த்தர் உங்கள் இருவருக்கும் வாய்க்கும் புருஷனுடைய வீட்டிலே நீங்கள் சுகமாய் வாழ்ந்திருக்கச் செய்வாராக என்று சொல்லி, அவர்களை முத்தமிட்டாள். (ரூத் 1: 8, 9)
1) கண்ணியம்: கண்ணியத்துடன் நகோமி தனது மருமகள்களை நடத்தினார். அவளின் மீதும் மற்றும் குடும்பத்தின் மீது விழுந்த அனைத்து துரதிர்ஷ்டங்களுக்கும் அவர்கள் தான் காரணம் என்று சொல்லி அவர்களை கேலி செய்யவோ அல்லது சபிக்கவோ இல்லை. அவர்கள் தங்கள் கணவர்களை, அதாவது அவளது மகன்களை விழுங்கியதாக நவோமி குற்றம் சாட்டவில்லை. அவர்களை மரியாதையுடன் நடத்தும் அளவுக்கு நகோமி முதிர்ச்சியடைந்திருந்தார்.
2) விருப்பத்தை தேர்வு செய்தால் - சுதந்திரம்:: நகோமி,தங்கள் சொந்த வீடுகளுக்குச் செல்ல வாய்ப்பையும் சுதந்திரத்தையும் அவர்களுக்குக் கொடுத்தார். தன்னைப் பின்தொடர்ந்து இஸ்ரவேலுக்கு வர அவள் அவர்களை கட்டாயப்படுத்தவில்லை. தங்கள் மருமகள்கள் நிரந்தர அடிமைத்தனம் மற்றும் சேவையில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் மாமியார்கள் உள்ளனர்.
3) அவர்களின் நற்குணத்தை ஒப்புக்கொண்டார்: நகோமி ஒர்பாள் மற்றும் ரூத் அவளிடமும், அவளுடைய மகன்களான, தங்கள் கணவர்களிடமும் அன்பாக இருந்ததாக கூறினார். அவர்களின் அபூரணத்தைப் பார்ப்பதற்குப் பதிலாக, நகோமி அவர்களின் கனிவான வார்த்தைகளையும் செயல்களையும் பார்க்கும் பக்குவத்தைப் பெற்று அவர்களைப் பாராட்டினார்.
4) அவர்களுக்கு ஒரு புதிய திருமணத்தை விரும்பினாள்: ஒர்பாள் மற்றும் ரூத் இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொள்ள நகோமி விரும்பினார். அவர்கள் விதவைகளாக இருந்து மற்றும் தனியாக இறக்க வேண்டியதில்லை. அவர்களுக்கு புதிய வாழ்க்கைத் துணைவர்களுடனும் மகிழ்ச்சியான இல்லத்துடனும் ஒரு புதிய வாழ்க்கை விரும்பினார். நகோமி உண்மையில் தனது மருமகள்களிடம் தாராள மனதுடன் இருந்தார்.
5) ரூத்தையும் திரும்பிச் செல்ல வற்புறுத்தினார்: நகோமி உண்மையில் ரூத்தை தனது வீட்டிற்கு ஒர்பாளைப் போலத் திரும்பச் செல்லும்படி கேட்டுக் கொண்டார். (ரூத் 1:15) ஆம், ரூத் கஷ்டப்படுவதை அவள் விரும்பவில்லை, ஏனெனில் இனி நகோமி முற்றிலும் தனிமையில் தவித்து இறந்துவிடக்கூடும்.
ஒர்பாள் திரும்பிச் செல்லத் தீர்மானிக்கிறாள்,
நகோமி இரண்டு மருமகள்களுக்கும் அவரவர் வீடுகளுக்குச் செல்லுமாறு பரிந்துரைத்தார். மருமகள்கள் திருமணம் செய்து ஓய்வு எடுக்க வேண்டும் என்று விரும்புவது நவோமியின் நல்ல எண்ணம். இளையவளான ஒர்பாள் வீடு திரும்புகிறாள், அதே நேரத்தில் பெரியவள் ரூத் நகோமியுடன் ஒட்டிக்கொள்ள முடிவு செய்கிறார்.
நகோமி ரூத்தைத் தடுக்கிறாள்
ரூத், தன்னோடு வந்தால் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ முடியாது என நகோமி மறுக்கிறாள். அவளுக்கு இனி ஒருகணவன், அவன் மூலம் மற்றும் ஒரு மகன் பிறந்து லெவிரேட் (மாண்டவன் மனைவியை உடன்பிறந்தான் மணந்துகொள்ளும் முறைப்படி) திருமண சட்டத்தின்படி ரூத்தை மணக்க முடியும் என்பது சாத்தியமில்லை என்பதால் அவள் ரூத்தைத் தடுக்கிறாள்.
ரூத் விசுவாசத்தின் காரணமாக இடம்பெயர்கிறாள்
ரூத் பல துரதிர்ஷ்டங்களைச் சந்தித்த நகோமியுடன் சேர்ந்து இஸ்ரவேலுக்கு குடிபெயர்ந்தாரள். நகோமி பத்து வருடங்களுக்குள் மூன்று மரணங்களை அனுபவித்தவள். ஆயினும்கூட, ரூத் நகோமியுடன் இஸ்ரேலுக்குச் செல்ல விரும்புகிறாள். அவள் நகோமியைப் போல உலகக் கனவைப் பின்தொடர்கிறாளா? நகோமியின் வாழ்க்கையில் வியத்தகு அதிசயங்கள் அல்லது அற்புதங்கள் எதுவும் இல்லை. அநேகமாக, ரூத் மட்டுமே நகோமி தனது சூழ்நிலையை விசுவாசத்தால் கிரகித்த அணுகுமுறையுடன் எவ்வாறு கையாண்டார் என்று பார்த்தாள்.
உடன்படிக்கை உறவும் விசுவாசமும்
இது ரூத் சொன்னதுபோல, சத்தியத்தைத் தேடி அவளது விசுவாச இடம்பெயர்வு' ஆகும்.அவ: சொல்கிறாள், “அதற்கு ரூத்: நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம்; நீர்போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்படுவேன்; மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச்சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள்.” (ரூத் 1: 16-17) யூத ரபீக்களால் “ விருப்பப்படி ரூத் யூதரானதாக” கருதப்படுகிறார். அவள் ஒரு புதிய (புவியியலை) நிலப்பரப்பைத் தேர்ந்தெடுத்தாள் (தங்கும் இடம், இறக்கும் மற்றும்புதைக்கப்படும் இடம்), நகோமியுடன் தன்னை இணைத்துக் கொள்ளும் புதிய வம்சாவழி மற்றும் யெகோவா தேவனை பின்பற்றுபவராக மாறியதன் மூலம் புதிய ஆன்மீகப் பயணம்.
தேவனையும், சத்தியத்தையும் அறிந்து இறப்பது நலம் என்று ரூத் புரிந்துகொண்டார். இருவரும் பெத்லகேமை அடைய மேல்நோக்கி நடந்தார்கள். அவர்களின் நீண்ட பயணம் முழுவதும் அவர்களின் உரையாடல் என்னவாக இருந்திருக்கும்? அநேகமாக, நகோமி தனது தேசத்தின் வரலாற்றையும், அந்த தேசத்தில் தேவன் எவ்வாறு செயல்பட்டார் என்பதையும் விளக்கியிருக்கலாம்.
நகோமியும் ரூத்தும் பெத்லகேமுக்கு வருகிறார்கள்
நவோமிக்கு வலிகள் மற்றும் கசப்பு இருந்தபோதிலும், அவள் இஸ்ரேலை விட்டு மேலும் விலகிச் செல்ல விரும்பவில்லை, மாறாக தாயகத்திற்கு திரும்பினாள்.அவளுடைய வாழ்க்கையில் பல பின்னடைவுகள் இருந்தபோதிலும், ஒரு அடிப்படை நம்பிக்கை இருந்திருக்க வேண்டும். நவோமி: முழுமையிலிருந்து-முறிவுக்கு; சமாதானத்திலிருந்து-கசப்புக்கு மற்றும் கனிகளிலிரு-ந்து மலட்டுத்தன்மைக்கு அவள் மாறியதாக உணர்ந்தாள்.
நகோமியை மீண்டும் பார்க்க அந்த சிறிய நகரம் உற்சாகமாக இருந்தது. வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்தார்கள், அவர்கள் வெறுமையாகவும் கசப்பாகவும் வந்ததாகக் கூறினார்கள். கிராமவாசிகளில் யாராவது, "அவள் ஏன் வெறுமை மற்றும் கசப்புடன் திரும்பினாள்?" என கேட்டிருக்கக் கூடும் அவள் ஒருவேளை இவ்வாறுபதிலளித்திருப்பாள்: "மனந்திரும்பி, தேவனுடைய மன்னிப்பைப் பெறுவதற்க்கு."என்று.