அதிகாரம்- 20
‘அவர்கள் கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்’
‘and they reigned with Christ for a thousand years’
வெளி (Rev): 20: 4
முன்னுரை:-
1. சாத்தான் உலகத்தை மோசம் போக்காதபடி ஆயிரம் வருஷம் பாதாளத்தில் தள்ளப்படுவான்.
2. பரிசுத்தவான்கள் உலகத்தை கிறிஸ்துவுடனே ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.
3. கிறிஸ்துவின் சேனைக்கும் பிசாசின் சேனைக்கும் கடைசி யுத்தம் நடக்கும்.
4. தேவன் வெள்ளை சிங்காசனத்தில் வீற்றிருந்து சிறியோரையும் பெரியோரையும் நியாயம் தீர்ப்பார். 2 ஆம் பாகம்- பாட்டு 12: 1,4
வச 1-3: மிருகமும் கள்ளதீர்க்க தரிசியும் அக்கினிகடலில் தள்ளப்பட்டபிறகு சாத்தான் ஆயிரம் வருஷம் வரைக்கும் பாதாளத்தில் காவலில் அடைக்கப்படுவான். லூக்கா 8: 31, வெளி 9: 1- 4, 11:7, 17: 8.
ஏன்?
• சாத்தான் உலகத்தை பாவம்செய்ய விடாதபடிக்கும்.
• கிறிஸ்து உலகத்தை பரிசுத்தமாய் நடத்தும்படிக்கும். லூக்கா 8: 31, வெளி 9: 1- 4, 11:7:, 17: 8.
வச 4-6: முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடைந்த பரிசுத்தவான்கள் கிறிஸ்துவோடு ஆயிரம் வருஷம் இதே உலகத்தை அரசாளுவார்கள்.
• இரட்சிக்கப்பட்டவர்கள்,படாதவர்கள் அனைவரும் இருப்பார்கள். ஆனால்
• இரட்சிப்பும் இல்லை, மரணமும் இல்லை. ஏசாயா 11: 1- 9. 65: 20, 25
பாட்டு 194: 2,3
வச 7-10: சாத்தான் விடுதலையாக்கப்பட்டு கோக், மாகோக் இராஜ்ஜியங்களின் ராஜாக்களை மோசம்போக்கி கடைசி யுத்தத்திற்கு கூட்டிசேர்க்கிறான். எசே 38: 2
• மேசேக், தூபால் ( மாஸ்கோ, தோபோல்ஸ்) என்ற ரஷ்ய தேசங்கள் இஸ்ரேலுக்கு விரோதமாக எருசலேமை நோக்கி படையெடுத்து வரும்.
• தேவன் அக்கினியினால் பட்சித்துப்போடுவார்.
• பிசாசு,மிருகம், கள்ள தீர்க்கதரிசி நித்திய அக்கினி கடலில் தள்ளப்படுவார்கள்.
வச 11-14: தேவன் வெள்ளை சிங்காசனத்தில வீற்றிருந்து நியாயத்தீர்ப்பு அளிக்கிறார்.
• புதிய ஏற்பாடு பரிசுத்தவான்கள் நியாயத்தீர்ப்பு செய்கிறார்கள்.
• மற்ற பரிசுத்தவானகளும் நியாயத்தீர்ப்பு செய்யப்படடு அவரவருடைய பலன்களை பெறுவார்கள்.
• புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் உலகமனைத்தையும் நியாயத்தீர்ப்பு செய்வார்கள். வெளி 2: 26- 28, மத் 25: 31- 46. ரோமர் 14: 10
* ஜீவ புஸ்தகம் ? (15)
* ஆட்டு குட்டியானவரின் ஜீவ புஸ்தகம் ( 21: 27) ?
Author: Rev. Dr. R. Samuel