ஏசாயா 65:20-25

65:20 அங்கே இனி அற்ப ஆயுள் பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான்; நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்.
65:21 வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத் தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள்.
65:22 அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்.
65:23 அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை, அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெறுவதுமில்லை; அவர்களும், அவர்களோடேகூட அவர்கள் சந்தானமும் கர்த்தராலே ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள்.
65:24 அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவுகொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்.
65:25 ஓனாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப்போல வைக்கோலைத் தின்னும்; புழுதி சர்ப்பத்துக்கு இரையாகும்; என் பரிசுத்த பர்வதமெங்கும் அவைகள் தீங்குசெய்வதுமில்லை, கேடுண்டாக்குவதுமில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.




Related Topics


அங்கே , இனி , அற்ப , ஆயுள் , பாலகனும் , தன் , நாட்கள் , பூரணமாகாத , கிழவனும் , உண்டாயிரார்கள்; , நூறு , வயதுசென்று , மரிக்கிறவனும் , வாலிபனென்று , எண்ணப்படுவான்; , நூறு , வயதுள்ளவனாகிய , பாவியோ , சபிக்கப்படுவான் , ஏசாயா 65:20 , ஏசாயா , ஏசாயா IN TAMIL BIBLE , ஏசாயா IN TAMIL , ஏசாயா 65 TAMIL BIBLE , ஏசாயா 65 IN TAMIL , ஏசாயா 65 20 IN TAMIL , ஏசாயா 65 20 IN TAMIL BIBLE , ஏசாயா 65 IN ENGLISH , TAMIL BIBLE ISAIAH 65 , TAMIL BIBLE ISAIAH , ISAIAH IN TAMIL BIBLE , ISAIAH IN TAMIL , ISAIAH 65 TAMIL BIBLE , ISAIAH 65 IN TAMIL , ISAIAH 65 20 IN TAMIL , ISAIAH 65 20 IN TAMIL BIBLE . ISAIAH 65 IN ENGLISH ,