முக்கியக் கருத்து
- தேவ ஜனத்திற்காக தேவன் எழுந்தருளும்போது எதிராளிகள் செயலற்றுப் போவார்கள்.
- தேவ ஜனம் பெலனற்றவர்களாயிருந்தாலும் தேவன் அவர்களுக்கு சத்துவத்தைக் கொடுத்து பெலப்படுத்துவார்.
முன்னுரை :
இந்த சங்கீதம் ஒரு கொண்டாட்டத்தின் சிறப்பான பாடல். தேவனுடைய பெட்டி தற்காலிகமாக ஓபேத் ஏதோம் வீட்டில் வைக்கப்பட்ட இடத்திலிருந்து, அதை தாவீது தான் கட்டின சீயோன் மலைக்கு எடுத்துவரும்போது "தேவன் எழுந்தருளுவார், ...' (வச.1) என்ற வெற்றி தொனியோடு பாடப்பட்ட பாடல் (2 சாமு.6:2-18). பெலிஸ்தியர்களால் திருப்பி அனுப்பப்பட்ட தேவனுடைய பெட்டியை கடைசியாக அதனுடைய நிலையான ஸ்தலத்தில் கொண்டு வரும்போது, புறஜாதி இராஜாக்களால் ஒன்றும் செய்ய இயலாமல் செயலிழந்து ஒரு புகையைப்போல மறைந்து போவார்கள் (வச.2) என்று பாடப்பட்டது. தேவனுடைய பெட்டியை கொண்டு வரும் பவனிக் கூட்டத்திற்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள் என்ற தொனி "... வனாந்தரங்களில் ஏறிவருகிறவருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருடைய நாமம் யேகோவா, ...' (வச.4). ஆரவார சத்தமாக முழங்கியது. இப்படியே தேவனுடைய பெட்டி சீயோன் மலை வரை வரும் வரைக்கும் இஸ்ரவேலின் எல்லா கோத்திரங்களும் மகிழ்ந்து பாடுங்கள் என்று (வச.26) இல் காண்கிறோம்.
பொதுவான ஆவிக்குரிய பொருள்
1. தேவனுடைய சத்துருக்கள், தேவனைத் தேடாதவர்கள், நம்பாதவர்கள் இந்த உலகத்தில் எவ்வளவு பெலசாலிகளாக இருந்தாலும் தாழ்த்தப்பட்டு நிர்மூலமாக்கப்படுவார்கள். பொல்லாதவர்களை கடைசி நாளில் தேவன் தண்டித்து அழிப்பார்.
வச.1, 2, 6, 14, 21, 22, 30
2. தேவனுக்கு பயப்படுகிற தேவ மக்கள் எவ்வளவு பெலவீனராக இருந்தாலும் தேவன் அவர்களுக்கு சத்துவத்தைக் கொடுத்து, வாழ்க்கையை வáமாக்கி, உயர்த்துவார். ஆசீர்வதிப்பார்.
வச.3, 5, 6, 10, 13, 28
2 நாளா.14:11, 2 கொரி.12:9,10
3. தேவ மக்களை கடாட்சிக்க தேவன் எழுந்தருளும்போது, பூமியும், வானமும், பர்வதங்களும் அதிர்ந்து, துள்ளி தங்கள் பூரண செழிப்பை பொழியும். தேவ மக்களும், இராஜாக்களும் அவரை துதிப்பார்கள். இந்த வார்த்தைகள் தீர்க்கதரிசன
வார்த்தைகளும் ஆகும்.கடைசி நாளில் தேவன் இந்த உலகத்தை ஆள எழுந்தருளும்போது சர்வ பூமியும் அவரைத் துதிக்கும்.
வச.1, 3, 4, 7, 8, 9, 15, 16, 23-27, 29-33, 35
4. இப்படிப்பட்ட மகத்துவமான தேவன் தமது வார்த்தையாகிய வல்லமை பொருந்திய வசனத்தை நமக்குக் கொடுத்திருக்கிறார். பிசாசின் சிறையிருப்பிலுள்ளவர்களை தமது வசனத்தால் மீட்கிறார். தமக்கு துரோகம் செய்கிறவர்களையும் அவர் மன்னித்து இரட்சிக்கிறார்.தேவன் தந்த வசனத்தை பிரஸ்தாபப்படுத்தும் தேவ ஊழியர்கள் அனேகர் உலகத்தில் உண்டு. நாமும் பிரசித்திப்படுத்துவோமா?
வச.11, 18, 19, 20, 34.
Author: Rev. Dr. R. Samuel