முக்கியக் கருத்து :
- தாவீது மாயையான அந்நிய தேவர்களை நாடாமல் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறான்.
- தாவீது, தனது செல்வம் தேவனுக்கு ஊழியம் செய்யும் பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கே வேண்டியதாயிருக்கும் என்று அறிவிக்கிறான்.
- பிதாவாகிய தேவன், மேசியா கிறிஸ்துவை எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தியிருக்கிறார்.
(வச.1-4) தாவீது அந்நிய தேவர்களை நாடாமல் கர்த்தராகிய தேவன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறான். கர்த்தர் தன்னைக் காக்கும்படியாக தாவீது வேண்டிக்கொள்கிறான். அந்நிய தேவர்களைநாடி, பின்செல்லுகிறவர்களுக்கோ வேதனைகள் பெருகும் என்றும் அறிவிக்கிறான்.
"... அவர்கள் (புறஜாதிகள்) வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே, அவைகளில் ஆவி இல்லை. ... யாக்கோபின் பங்காயிருக்கிறவர் அவைகளைப்போல் அல்ல, அவர் சர்வத்தையும் உருவாக்கினவர் ...' (எரேமியா 10:14-16).
(வச.5:11) மேசியா கிறிஸ்து, தான் பிதாவாகிய தேவனைத் தனக்கு சுதந்திரமாகத் தெரிந்துகொண்டபடியால், தேவன் அவருடைய வலதுபாரிசத்தில் இருந்து மேசியாவின் ஆத்துமாவை (சிலுவை மரணத்திலும்) பாதாளத்திற்கு விடாமல், நேர்த்தியான இடங்களில் பங்களித்து ஜீவமார்க்கத்தையும் பரிபூரண ஆனந்தத்தையும் அளிப்பார் இது மேசியா கிறிஸ்து சாட்சியாகக் கூறும் தீர்க்கதரிசன வார்த்தைகள் ஆகும்.
"நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் ... கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, ... அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து, ... சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்' (எபேசியர் 1:17-23).
கர்த்தருக்கு ஊழியம் செய்யும்படி அழைக்கப்பட்ட லேவி கோத்திரத்தாருக்கு, மற்ற இஸ்ரவேலின் கோத்திரங்கள் நடுவே கானான் தேசத்தில் சுதந்திரத்தைக் கொடுக்காமல் கர்த்தரே அவர்களுக்குப் பங்காயிருந்தபடியால், இது லேவியரின் சாட்சியும் கூட.
"லேவி கோத்திரத்திற்கு மோசே சுதந்திரம் கொடுக்கவில்லை, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குச் சொல்லியிருக்கிறபடி, அவரே அவர்களுடைய சுதந்திரம்" (யோசுவா 13:33).
வீணான விக்கிரகங்களையும் தெய்வமல்லாத மாயையானவற்றையும் நாடாமல் சர்வத்தையும் படைத்த தேவனாகிய கர்த்தர் மேல் நம்பிக்கையாயிருக்கும் எல்லா மனிதருக்கும் கிடைக்கும் சிறப்பான சுதந்திரமும் பரிபூரண ஆனந்தமும் இப்படியே இருக்கும்.
Author: Rev. Dr. R. Samuel