எபேசியர் 1:17-23

1:17 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்,
1:18 தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்;
1:19 தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன்.
1:20 எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில்மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக,
1:21 அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து,
1:22 எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி,
1:23 எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.




Related Topics


நம்முடைய , கர்த்தராகிய , இயேசுகிறிஸ்துவின் , தேவனும் , மகிமையின் , பிதாவுமானவர் , தம்மை , நீங்கள் , அறிந்துகொள்வதற்கான , ஞானத்தையும் , தெளிவையும் , அளிக்கிற , ஆவியை , உங்களுக்குத் , தந்தருளவேண்டுமென்றும் , , எபேசியர் 1:17 , எபேசியர் , எபேசியர் IN TAMIL BIBLE , எபேசியர் IN TAMIL , எபேசியர் 1 TAMIL BIBLE , எபேசியர் 1 IN TAMIL , எபேசியர் 1 17 IN TAMIL , எபேசியர் 1 17 IN TAMIL BIBLE , எபேசியர் 1 IN ENGLISH , TAMIL BIBLE Ephesians 1 , TAMIL BIBLE Ephesians , Ephesians IN TAMIL BIBLE , Ephesians IN TAMIL , Ephesians 1 TAMIL BIBLE , Ephesians 1 IN TAMIL , Ephesians 1 17 IN TAMIL , Ephesians 1 17 IN TAMIL BIBLE . Ephesians 1 IN ENGLISH ,