முக்கியக் கருத்து
- கர்த்தருக்கு பயப்படுதலும், கீழ்ப்படிதலும் மாத்திரமே ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பத்தை அடையச் செய்யும்.
- நம்முடைய சமாதானம் எருசலேமின் சமாதானத்துடன் இணைந்திருக்கிறதை நாம் உணரவேண்டும்.
1. வச.1,2 - கர்த்தருக்கு பயந்து, அவர் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்போதுதான் நமது வாழ்க்கையில் நாம் எடுத்துக்கொள்ளும் எல்லா பிரயாசங்களும் ஆசீர்வதிக்கப்பட்டு நிறைவையும் சந்தோஷத்தையும் தரும். ஆகாய் 1:5-8, 2 தீமோத்.2:5,6.
2. வச.3,4 - எப்படிப்பட்ட ஆசீர்வாதம் வாழ்க்கையில் கிடைக்கும்? மனைவி கனிதரும் திராட்சச்செடிபோல மகிழ்ச்சியை அளித்து மிகுந்த பயனுள்ளவளாக காணப்படுவாள். பிள்ளைகள், ஒலிவமரம் தொடர்ந்து தடையற்ற ஆசீர்வாதத்தையும் ஆரோக்கியத்தையும் தருவதுபோல இருப்பார்கள். உபாகமம் 8:8, சங்கீதம் 52:8, ஓசியா 2:22.
3. வச.5,6 - தடையற்ற ஆசீர்வாதத்தின் அடையாளமாக பிள்ளைகளின் பிள்ளைகளை காணக்கூடிய தொடர்ந்த சந்ததி அருளப்படும். இப்படிப்பட்ட தொடர்ந்த என்றென்றுமுள்ள ஆசீர்வாதத்தை நித்திய பிதா ஒருவரே தமது சீயோனிலிருந்து தரமுடியும். அவரே அதை அருளுவார். தேவ ஜனத்தின் வாழ்வும் சமாதானமும் தேவனுடைய நகரமாகிய எருசலேமுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. ஆகவேதான், நாம் எருசலேமின் சமாதானத்திற்காக தொடர்ந்து ஜெபிக்க கட்டளையிடப்பட்டிருக்கிறோம். மேசியாவை எதிர்பாத்திருந்த இஸ்ரவேலருக்கும், கர்த்தரின் இரண்டாம் வருகையை எதிர்பார்த்திருக்கும் நமக்கும் கொடுக்கப்படுகிற ஆசீர்வாதங்களாகவும் இந்த வசனங்கள் காணப்படுகிறது.
ஆதி.49:10, வெளி.21:1-4.
Author: Rev. Dr. R. Samuel