முக்கியக் கருத்து
- எல்லா ஜாதி ஜனங்களும் கர்த்தரை துதிக்க கடமைப்பட்டிருக்கிறார்கள்.
- கர்த்தருடைய அன்பும் இரட்சிப்பும் எல்லா ஜாதிகளுக்கும் கிடைக்கும்படியாக அவர் கிரியை செய்கிறார்.
1. (வச.1) அனைத்து ஜனங்களுக்கும் கர்த்தரை துதிக்கவேண்டும். பூமியிலிருக்கிற சகல ஜீவராசிகளும்கூட அவரைத் துதிக்கவேண்டும் என்று பல வசனங்கள் அழைப்பு விடுக்கிறது. ஏனென்றால் அவர் எல்லா சிருஷ்டிப்புகளுக்கும், காணப்படுகிறவைகள் காணப்படாதவைகள் அனைத்திற்கும் மேலாக வல்லமையிலும், மகிமையிலும், மகத்துவத்திலும், பரிசுத்தத்திலும் உயர்ந்தவர்.சங்கீதம் 100:1, 150:6, ரோமர் 15:11
ஒருநாள் வரும், அப்போது எல்லா நாவும் அவரைக் கட்டாயமாகத் துதிக்கும். எல்லா முழங்கால்களும் அவருக்கு முன்பாக முடங்கும். ஏசாயா 45:23, பிலிப்பியர் 2:9-11, ரோமர் 14:11.
2. (வச.2) கர்த்தருடைய கிருபை, அன்பு எல்லார்மேலும் பொழியப்படுகிறது என்றென்றைக்கும் இருக்கிறது. தமது ஜனமாகிய இஸ்ரவேலருக்கு அவர் பாராட்டிய அன்பு, இரட்சிப்பு சகல ஜாதிகளுக்கும் அளிக்கப்படவே அவர் வாக்குப்பண்ணியிருக்கிறார். ஆபிரகாமை ஆசீர்வதித்தது மூலமாய் உலகத்தின் எல்லா வம்சங்களும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆதி.12:3 ஆம் வசனத்தில் கர்த்தர் உரைத்திருக்கிறார். எல்லா தேசத்து மக்களையும் இரட்சிக்கவே தேவன் சித்தம் கொண்டிருக்கிறார் என்று 2 தீமோத்.2:4 ஆம் வசனத்தில் வாசிக்கிறோம். மேலும் யோவான் 3:16 இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற அனைவருக்கும் உரியது. ஆண்டவராகிய இயேசுவும் சகல ஜாதிகளையும் சீஷராக்க தமது சீஷர்களுக்கு மத்தேயு 28:19 இல் கட்டளை கொடுத்திருக்கிறார்.
Author: Rev. Dr. R. Samuel