முக்கியக் கருத்து
- கர்த்தரே தேவன். துதித்தலுடன் மகிழ்ச்சியோடே அவரை அணுகவேண்டும்.
- கர்த்தர் தலைமுறை தலைமுறைக்கும் நல்லவர்.
1. கர்த்தரே தேவன் (வச.1-3)
கர்த்தரை துதித்தலுடன் தொழுதுகொள்ள நெருங்கும்போது மிகுந்த மகிழ்ச்சியை கொடுப்பதை பூமியின் குடிகள் எல்லோரும் உணரவேண்டும் (வச.1,2). கர்த்தர் ஒருவரே தேவன் என்று நாம் அறிய மூன்று காரணங்கள் உண்டு,
1) அவரே நம்மை படைத்தவர் 2) நம்மை தமது ஜனமாக தெரிந்தெடுத்தார் (எபே.1:11-13). 3) அவர் நமக்கு ஒரு மேய்ப்பனைப்போல இருந்து எல்லாம் தருகிறார் (வச.3).
உலக மக்கள் வீணானவற்றை தேடி தங்களை ஆண்டுகொள்ள தாங்களே பல பொய்யான தேவர்களைத் தேடிக்கொள்ளுகிறார்கள். ஆனால், கர்த்தரோ சகலத்தையும் படைத்த மெய்யான தேவன் ஏசாயா 2:8 .கர்த்தரைத் துதித்து தொழுதுகொள்வதுதான் மனித வர்க்கத்திற்கு உண்மையான நிலையான சந்தோஷத்தைக் கொடுக்கக்கூடியது. உலக மக்கள் பலவித போதைப் பொருட்கள், உலக இச்சைகள், பாவ வழிகள் இவற்றில் மகிழ்ச்சியை தேடிக்கொள்கிறார்கள். கர்த்தருடைய பரிசுத்த ஆவியானவரே மெய்யான மகிழ்ச்சியைத் தருகிறார். எபேசியர் 5:17-20.
2. கர்த்தர் நல்லவர் (வச.4, 5)
கர்த்தர் நல்லவராயிருக்கிறபடியால் அவர் சமுகத்தைத் துதியோடும், நன்றி செலுத்துதலோடும் அணுகவேண்டும். கர்த்தர் தலைமுறை தலைமுறைக்கும் நல்லவராக இருப்பார். அவருடைய கிருபை மாறாது. நாம் அவரை நெருங்கி அவருடைய நன்மைகளை பெற்றுக்கொள்ளும் விதத்தில் தான் இந்த சத்தியம் அடங்கியுள்ளது. நமக்கு சகாயம் வேண்டும்போது தயங்காமல், தைரியமாக அவருடைய கிருபாசனத்தை நெருங்கலாம். கர்த்தரும் நமக்கு தயை இரக்கம் பாராட்டி உதவிகள் செய்ய வாக்குக் கொடுத்திருக்கிறார். யாத்திராகமம் 25:20-22, 29:45,46; எபிரெயர் 4:16.
Author: Rev. Dr. R. Samuel