சங்கீதம் 147:3 இருதயம் நொருங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்; அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.
1. காயம் ஆற்றிய கர்த்தர்
எரேமியா 34:1-24 காணாமற்போனதைத் தேடி, துரத்துண்டதைத் திரும்பக் கொண்டு வந்து, எலும்பு முறிந்ததைக் காயங்கட்டி, நசல்கொண்டதைத் திடப்படுத்துவேன்
எரேமியா 30:12,13,17 உன் புண் ஆறாததாயும் உன் காயம் கொடிதாயும் இருக்கிறது. உன் காயங்களைக் கட்டும்படி உனக்காக ஏற்படுவாரில்லை நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி உன் காயங்களை ஆற்றுவேன்
யோபு 5:18 அவர் காயப்படுத்தி காயங்கட்டுகிறார்; அவர் அடிக்கிறார் அவருடைய கை ஆற்றுகிறது.
ஓசியா 6:1 அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்
ஏசாயா 53:5 அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்
எரேமியா 10:19 நான் நொறுக்கப்பட்டேன்; என் காயம் கொடியது
புலம்பல் 2:13 உன் காயம் சமுத்திரத்தைபோல் பெரியது
2. காயம் கட்டிய சமாரியன்
லூக்கா 10:30-34 கள்ளர் கையில் அகப்பட்டு, குற்றுயிராய் கிடக்கும் மனிதனைக் கண்டு ஆசாரியனும், லேவியனும் ஒதுங்கிபோகும்போது, சமாரியன் அவனைக் கண்டு, மனதுருகி, கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசத்தையும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்.
3. காயம் கழுவிய சிறைச்சாலைக்காரன்
அப்போஸ்தலர் 16:33,34(16-34) சிறைச்சாலைக்காரன் பவுலையும் சீலாவையும் தன் வீட்டிற்கு அழைத்துக்கொண்டுபோய், அவர்களுயை காயங்களைக் கழுவினான். அவனும் அவனுடைய வர்கள் அனைவரும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள். பின்பு அவன் அவர்களை தன் வீட்டிற்கு கொண்டுபோய்... தன் வீட்டார் அனைவரோடுங்கூட தேவனிடத்தில் விசுவாசமுள்ளவனாகி மனமகிழ்ச்சியாயிருந்தான்.
Author: Rev. M. Arul Doss