ஒரு சுற்றுலாப் பயணி ஒரு சிறிய லாட்ஜுக்குச் சென்று மூன்று நாட்கள் தங்க முன்பதிவு செய்ய விரும்புகிறார். அதற்காக உரிமையாளர் முன்கூட்டியே (advance) 5000 ரூபாயை வாங்கி கொள்கிறார். அந்நபர் தனக்காக ஒதுக்கப்பட்ட அறைக்கு செல்லும் முன், சாப்பிட செல்கிறார். லாட்ஜ் உரிமையாளரோ தான் வாங்கின முன்தொகையை எடுத்துக் கொண்டு மளிகைக் கடைக்காரரிடம் இருக்கும் நிலுவை தொகையைக் அடைக்கின்றார், உணவு வழங்குபவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார், அவர் தான் பணம் பெற்றியிருந்த தையல்காரருக்கு அந்த பணத்தை அனுப்பினார். தையல்காரரோ தான் உத்தரவாதம் அளித்திருந்த வாடகை செலுத்தாத தனது நண்பருக்கு பணம் கொடுக்க லாட்ஜுக்கு வந்தார். இதற்கிடையில், சுற்றுலாப் பயணி தனக்கு ஒதுக்கப்பட்ட அறையைப் பார்த்து, திருப்தியடையவில்லை, ஆகையால் தான் கொடுத்த பணத்தை உரிமையாளரிடம் திருப்பி கேட்டார். ஆனால் அதற்குள்ளாக, பணம் மூன்று பேரிடம் கைமாறியது மற்றும் அவர்களின் கடன்களும் அடைக்கப்பட்டிருந்தது. இது வேடிக்கையாக இருக்கின்றது இல்லையா? ஆம், கண் இமைக்கும் நேரத்தில் பணம் மறைந்துவிடும். "அது கழுகைப்போல சிறகுகளைத் தனக்கு உண்டு பண்ணிக்கொண்டு, ஆகாயமார்க்கமாய்ப் பறந்துபோம்" என்பதாக நீதிமொழிகள் 23ல் 4,5 வசனங்கள் சொல்கின்றது. ஒரு அரசியல்வாதி கூறினார்: "பணம் கடவுள் அல்ல, ஆனால் அது கடவுளை விடக் குறைவும் அல்ல." பலருக்கும் அப்படிப்பட்ட எண்ணம் தான் உள்ளது.
தீமோத்தேயுவுக்கு எழுதிய கடிதத்தில் ஐசுவரியம் பற்றிய அறிவுரைகளை பவுல் கொடுக்கிறார் (1 தீமோத்தேயு 6: 17-19):
1) தற்பெருமை கொள்ளாதீர்கள்:
உடைமைகள் அல்லது தனக்கு இருக்கும் சொத்து மதிப்புகள் ஒரு நபரை பெருமைப்படுத்தலாம், அந்நபர் ஏழைகளை கிண்டல் கேலி செய்யலாம். பணக்காரர் நினைவில் கொள்ள வேண்டும், தேவன் ஒருவரே ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனைக் கொடுக்கிறவர் (உபாகமம் 8:18).
2) ஐசுவரியத்தை நம்பாதீர்கள்:
ஐசுவரியம் என்பது நிச்சயமற்றது என்று பவுல் கூறுகிறார். ஐசுவரியம் மயக்கம் தருவதாக ஆண்டவர் கூறினார் (மத்தேயு 13:22). எனவே ஐசுவரியத்தை நம்புவது பேரழிவில் தான் முடிவடையும்.
3) ஐசுவரியம் நன்மை செய்யட்டும்:
பணமே வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்கக்கூடாது. நல்ல செயல்களில் ஈடுபடுவதன் மூலம் தேவநாம மகிமைக்காக வாழ்வது ஒரு விசுவாசியின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
4) பரலோகத்தில் சேமியுங்கள்:
இந்த உலகின் செல்வங்கள் நித்தியமானவை அல்ல. பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க ஆண்டவர் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளார் (மத்தேயு 6: 19-21). அதே சமயம் அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள் (லூக்கா 16: 9) என்றும் ஆண்டவர் கூறுகிறார்.
5) தாராளமாக இருங்கள்:
உண்மையில், தாராள மனப்பான்மை என்பது ஒரு ஆவிக்குரிய பண்பு. இது பெரும்பாலான மக்களுக்கு இயல்பாக வருவதில்லை. ஆனால் தேவனுடைய தாராள மனப்பான்மையையும் கிருபையையும் அனுபவித்த சீஷர்கள் மற்றவர்களுக்கு அதை நிரூபிக்க முடியும்.
தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி என் குறைவையெல்லாங் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார் என விசுவாசிக்கிறேனா? (பிலிப்பியர் 4:19)
Author: Rev. Dr. J. N. Manokaran