தனிமை, நிராகரிப்பு, மன அழுத்தம், குடும்பத்திலிருந்து தூரமாக இருத்தல், கலாச்சார சூழல், அநீதி மற்றும் விரக்தி ஆகியவை ஒரு நபரை பல வழிகளில் பாதிக்கலாம். இதுபோன்ற கடினமான சூழல்களை மிஷனரிகள் தாங்குகிறார்கள். வேதாகமத்திலும் இது போன்ற துயரத்தின் உலை வழியாக கடந்து சென்ற ஆளுமைகளை காண முடியும். மருத்துவ ஆராய்ச்சி இப்படியாக கூறுகிறது; தனிமை சீக்கிரத்தில் வயதானவராக்குகிறது, அது மாத்திரமல்ல ஆயுட்காலத்தையே குறைக்கிறது. பல பரிசுத்தவான்கள் தேவ நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக இந்த விலைக்கிரயத்தை செலுத்தியுள்ளனர்.
குறைந்த ஆயுட்காலம்?
யோசேப்பு தனது 110 வயதில் இறந்தார், அவருடைய மூத்த சகோதரர்கள் இறப்பதற்கு முன்பே யோசேப்பு மரித்து போனார் (ஆதியாகமம் 50:26). யோசேப்பை பொறுத்தவரையில் ஆவிக்குரிய வாழ்வு, சரீர பாடுகள், உணர்வுபூர்வமான சம்பவங்கள், வெளியுலகில் சந்தித்த பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தத்தையும் அனுபவித்தார். ஒருவேளை, அவர் காலங்கள் நீடித்த நாட்களாக இல்லாமல் போனதற்கு இதெல்லாம் காரணமாக இருக்கலாம்.
அழைப்பு:
யோசேப்பு ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக தேவனால் அழைக்கப்பட்டார். ஒரு இளைஞனாக இருந்தபோதும் அவர் தனது எதிர்கால வாழ்க்கையைக் குறித்த கனவுகளைக் கொண்டிருந்தார் (ஆதியாகமம் 37:1-5). பின்னர், அந்தக் கனவுகளையும் தன் வாழ்க்கை நோக்கத்தையும் இணைக்கிறார். அவர் தனது சகோதரர்களால் நிராகரிக்கப்பட்டாலும், தவறாக நடத்தப்பட்டாலும், விற்கப்பட்டாலும், பிற்காலங்களில் இஸ்ரவேல் தேசமாக மாறிய ஆபிரகாம், ஈசாக் மற்றும் யாக்கோபின் சந்ததியினரின் உயிரைக் காப்பாற்ற தேவன் அவரை எகிப்துக்கு அனுப்பினார் என்பதை அவர் புரிந்துகொண்டார் (ஆதியாகமம் 45:5-7).
ஆச்சரியமும் அதிர்ச்சியும்:
யோசேப்பு தன் சகோதரர்களின் வெறுப்பு மற்றும் கொடுமையான நடத்தையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இறப்பதற்காக குழியில் தள்ளப்பட்டு, ஒரு தரப்பினருக்கு அடிமையாக விற்கப்பட்டு, அவர்களிடமிருத்து மற்றொரு கும்பல் என போத்திபாரிடம் மாட்டிக் கொண்ட நிலை. நெருக்கடி மற்றும் அதிர்ச்சிகரமான அனுபவங்கள் ஒரு நபரின் ஆன்மாவை பாதிக்கலாம். கலாச்சார அதிர்ச்சி அருட்பணிகளில் ஈடுபட்டுள்ள மக்களையும் புலம்பெயர்ந்தோரையும் பாதிக்கிறது.
கலாச்சார தொடர்பு:
யோசேப்பு உயிர்வாழ எகிப்தியர்களின் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. தானியேலைப் போல அறிஞராகக் கற்றுக்கொள்வதை விட அடிமையாகக் கற்றுக்கொள்வது கடினமாக இருந்திருக்கும். இது மிகப்பெரிய மன மற்றும் உணர்வு பூர்வமான அழுத்தத்தையும் உருவாக்குகிறது.
மதிப்பு மோதல்:
பல கலாச்சாரங்களின் கலாச்சார மதிப்புகள் வேதத்திற்கு முரணாக இருக்கலாம். எஜமானரின் மனைவியுடன் இருப்பது அனுமதிக்கப்படலாம், ஆனால் யோசேப்பைப் பொறுத்தவரை, அது தெளிவாகத் தடைசெய்யப்பட்ட காரியமாக இருந்தது. தானியேல் கூட ராஜாவின் போஜனத்தினாலும் பானம் பண்ணும் திராட்சை இரசத்தினாலும் தன்னை தீட்டுப்படுத்தாதபடி காத்துக் கொண்டானே.
இணைக்கப்பட்டது மற்றும் கவனிக்கப்பட்டது:
மக்கள் சொந்தப்பந்தம், பிண்ணிப்பிணைந்த, அன்போடு மற்றும் அக்கறை கொண்ட உணர்வோடு உறவுகளைக் கொண்டிருக்க விரும்புகிறார்கள். யோசேப்பு உண்மையில் வீடு திரும்ப வேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்தார் (ஆதியாகமம் 40:15). வீடு, பெற்றோர், உடன்பிறந்தவர்கள், துணை மற்றும் பிள்ளைகளை விட்டு விலகி வாழ்வது மக்களை பாதிக்கிறது.
அவருடைய சித்தத்தைச் செய்வதற்கு நான் தியாகம் செய்யத் தயாரா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்