விழி திறந்தது! வழி கிடைத்தது!

தொடர் - 10

தோட்டத்தில் அமர்ந்து நீலவானை வெறிக்க வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தாள் பியூலா! வெண்ணிற ஆடையில் சோகமே உருவான தேவதை போலிருக்கும் தன் தங்கையை நோக்கி வந்த ஜெபா, “என்னம்மா பியூலா? வெள்ளை நிற சேலை அணிய அப்பா அனுமதிக்க மாட்டாரே?” ஆச்சரியத்தோடு கேட்ட அண்ணனை நிமிர்ந்து பார்த்தாள் பியூலா.

அண்ணா! நான் பைபிள் படிக்கிறேன். நான் கர்த்தருக்குப் பிரியமான பிள்ளையா, பக்தியுள்ள பிள்ளையா இருக்கப் போறேன். இனி எப்பவும் வெண்ணிற ஆடைதான் உடுத்தப்போறேன்!”.

தன் தங்கையைப் பரிதாபமாகப் பார்த்தார் ஜெபா. “பியூலா வெண்ணிறம் பரிசுத்தத்தைக் குறிக்கலாம். ஊழியர்களின் சீருடையாகவும் இருக்கலாம். அதற்காக மற்றவர்கள் எப்பொழுதும் வெள்ளை நிற ஆடை அணிய வேண்டுமென்பது அவசியமல்ல. வெண்ணிற ஆடை அணிந்ததால் நாம் பரிசுத்தமாகிவிட முடியாதம்மா, நம்ம மனம் வெண்மையாகனும் (ஏசா 1:18) “நம்முடைய பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்” எப்பொழுது? இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்போது பாவ மன்னிப்பின் நிச்சயத்தை நாம் பெறும்பொழுது, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு தூய்மை அடைகிறோம்”.

“உண்மையண்ணா! நான் கண்ணீரோடே ஆண்டவர் பாதத்தில் விழுந்து பாவ மன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்றுவிட்டேன் அண்ணா!” என்று தன் அண்ணனின் விழிகளை ஊடுருவிப் பார்த்தவள் தொடர்ந்து, “நான் பரிசுத்த ஆவியைப் பெறணும் அண்ணா! நாம் மீட்கப்படும் நாளுக்கு முத்திரை (எபே 4:30) பரிசுத்த ஆவியானவர் இல்லையா? அப்படியானால் அவர் நமக்கு மிகவும் தேவையில்லையா?”

“திருமறையை எடுத்து வா பியூலா! உன் வினாவிற்கு விடை திருமறையே கூறட்டும்” என்றார் ஜெபா.

திருமறையை எடுத்துக்கொண்டு திரும்பி வந்தாள் பியூலா! “எபே. 1:13, 14 ஐ வாசி” என்றார் ஜெபசிங்,

“நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய - வசனத்தைக் கேட்டு விசுவாசிகளான போது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரை போடப்பட்டீர்கள்” பியூலா திருத்தமாகத் தெளிவாக வாசித்தாள்.

'நாம் எப்பொழுது தேவனை இதயத்தில் ஏற்றுக்கொள்கிறோமோ, அப்பொழுதே பரிசுத்த ஆவியால் முத்திரை போடப்படுகிறோம். அதாவது பரிசுத்த ஆவி என்னில் தங்க நான் பாத்திரவானாகிறேன். “பரிசுத்த ஆவியைப் பெற்றுவிட்டேன்” என ஒரு பொருளை கடையில் வாங்கினதைப் போலக் கருதி இறுமாப்படைவதும் தவறு. அதே நமயம் ஞானஸ்நானம் பெற்றபோதே அல்லது திடப்படுத்தல் எடுத்தபோதே பரிசுத்த ஆவி என்னில் வந்து தங்கிவிட்டார் என சுய திருப்தி கொண்டு நிர்விசாரமாக வாழ்வதும் தவறு” அழுத்தமாகச் சொன்னார் ஜெபசிங்.

“பரிசுத்த ஆவியைப் பெற என்ன செய்ய வேண்டுமண்ணா?”

“ரோமர் 89ல் கூறியபடி மாம்சத்திற்குட்பட்டவர்கள் பரிசுத்த ஆவியைப் பெறமுடியாது. கலா 5:19ல் கூறப்பட்ட மாம்சத்தின் கிரியைகள் நம்மில் காணப்படக் கூடாது. அப் 2:1ல் காணப்பட்டபடி நமக்கு ஒருமனம் தேவை. சுயத்தை விட்டொழிக்க வேண்டும். லூக்கா 11:13ல் பரிசுத்த ஆவியானவர் நம்மில் செயல்பட கேட்க வேண்டும். பரிசுத்த ஆவியின் நிறைவு, வேண்டும் என்ற தாகம் வேண்டும். அதிகாலை நேரம் சிறந்தது. குறிப்பிட்ட நேரத்தை ஆண்டவருக்கு ஒதுக்கு! திருமறையை வாசித்து, தியானி! அனைவருக்காகவும் அவர்
பாதத்தில் காத்திரு! “ஒருமணி நேரமாவது விழித்திருக்கக் கூடாதா?” என்று இயேசு தன் சீடர்களைக் கேட்டதை உணர்ந்து ஒருமணி நேரத்தையாவது அவருக்குக் கொடு”.

“விடாப்பிடியாக ஜெபித்தால் பரிசுத்த ஆவியின் வழி நடத்துதல் கிடைக்குமாண்ணா?.
“கேளுங்கள்... அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீரகள் என்ற நம் தேவன் வாக்கு மாறாதவர், பியூலா!”

“பரிசுத்த ஆவியின் நிறைவு உடையவர் வாழ்க்கைக்கும் மற்றவர் வாழ்க்கைக்கும் வித்தியாசம் உண்டு. இல்லையா?”.

“வித்தியாசம் நிச்சயம் உண்டு....” :

1 கொரி 6:19, 1 கொரி 3:16,  1பேதுரு 4:14ன்படி நாம் பரிசுத்த ஆவியானவர் தங்கும் ஆலயம். நம் ஆலயத்தை (சரீரம், உள்ளம்) பரிசுத்தமாக கறையில்லாமல் காத்துக் கொள்ள வேண்டும். வெளியரங்கமான பரிசுத்தம் மாத்திரமல்ல, நம் எண்ணங்களும், சிந்தனைகளும் பரிசுத்தமாயிருக்க வேண்டும். அப்பொழுது அவர் உன் உள்ளத்தில் இருப்பதை அறிவாய். யோவான் 14:26ன்படி, அவர் சத்தம் தொனிக்கும், அவர் சித்தம் அறிவாய். 1 கொரி 2:11, 13ன்படி தேவனுக்குரியவைகளை அறிவாய், தவறான வழியில் செய்ய உன்னால் முடியாது. பிரச்சனைகள் நெருக்கும் போது தீர்வுகாண உதவுவார். யோவான் 14:16, 17ன்படி வேதனையில் விழி நீ துடைத்து ஆறுதல் நல்குவார். ரோமர் 5:5ன்படி தேவ அன்பு உன்னில் ஊற்றப்படும். ஆவியின் கனி (கலா.5:22,23) உன்னில் காணப்படும். உன் ஜெபமே மாறுதலாக இருக்கும். பிறருக்காக, பிற ஆத்தும இரட்சிப்பிற்காக கண்ணீரோடு ஜெபிப்பாய். நீ எதிர்பாராத காரியங்களை தேவன் வெளிப்படுத்தி ஜெபிக்கச் சொல்வார். உன் தாலந்தை அவருக்கு அர்ப்பணிக்க முன் வருவாய். அதன் பலன்களையும் காண்பாய். பரிசுத்த ஆவியினால் நாம் நிறைந்திருக்கும் வாழ்வு விளக்கைக் கொளுத்தி விளக்குக் தண்டின் (மத், 5:13-15) மீது வைத்ததைப் போன்றது, உணவின் சுவைக்காக தன்னையே கரைக்கும் உப்பைப் போல மற்றவருக்காக உப்பாக மாறுகிறோம். ஜெபம்! வேதவாசிப்பு! தியானம்! எல்லாவற்றிற்கும் எப்பொழுதும் ஸ்தோத்திரம் கூறும் நன்றியறிதலுள்ள வாழ்வு, ஆவியின் கனியும், ஆவியின் வரங்களும் காணும் வாழ்வு! இதுதான் ஆவியின் நிறைவு!” தன்னையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கும் தன் தங்கையைப் பார்த்த ஜெபா, பியூலா! நம் ஒவ்வொருவருக்கும் கடமையிருக்கும்மா! அந்தக் கடமையிலிருந்து நாம் தவறிவிடக்கூடாது. நம் கடமையைச் சரிவரச் செய்யும் போது பரிசுத்த ஆவியானவர் நம்மில் தங்கி மகிழ்வார். நான் உன்னை விரட்டுகிறேன் என்று நினைக்காதேம்மா! பகைவனையே நேசிக்கச் சொல்லுகிறார் நம் கர்த்தர். நீ உன் கணவனை நேசிக்க வேண்டாமா?” 

“அண்ணா” அழுதே விட்டாள் பியூலா! என் மனசுபடுகிற பாடு எனக்குத்தாண்ணா தெரியும். நான் அவரை எவ்வளவு நேசிக்கிறேன் தெரியுமா? அதனால்தான் அவர் குடிக்கக் கூடாதுன்னு சொல்றேன். நான் இங்கே இருக்கரேன்னு நெனைக்கிறாயாண்ணா? அவர் இப்ப வந்து கூப்பிட்டா உடனே ஓடிப்போயிடுவேன்!”

“பியூலா! இந்த சுய கெளரவம் வேண்டாம்மா, சுய கெளரவத்தினால் தான் எத்தனையோ குடும்பங்கள் பிளவுபட்டே இருக்கும்மா! அன்பு என்பது விட்டுக்கொடுப்பதில் தானம்மா இருக்கிறது. நீ கடவுளுடைய பிள்ளை என்றால் நீதாம்மா பணிந்து போகனும், அவங்க உன்னை விரட்டவும் இல்லை, கொண்டு வந்து விடவுமில்லை. நீயே சொல்லாமல் வந்துவிட்டாய், நீயாத்தான் போகணும்!”

“வரும்போது வேகமிருந்தது. எப்படிப் போகணும் என்று தெரியலையேண்ணா! அவர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா?”

“வேகமிருந்தால் விவேகமிருக்காது. எதிலும் நிதானம் வேண்டும்மா. சரி போனது போகட்டும்! நடக்க வேண்டியதைப் பார்ப்போம். ஜெபித்து விட்டுப்போம்மா! அது உன். வீடு உன் கணவன் மட்டும் அங்கு நிம்மதியா இருப்பார்ன்னு நினைக்கிறாயா? நிச்சயமா இருக்கமாட்டார். அங்கபோனதும் யார் எது சொன்னாலும் எதிர்த்துப் பேசாதே! நன்கு ஜெபி. உபவாசமிருந்து ஜெபி. உன் கணவர் மீது நீ செலுத்தும் அன்பும், கடவுளின் கிருபையும் தான் அவரை மாற்றும்.”

ஊ.. “சரிண்ணு” தலையை ஆட்டினாள் பியூலா. மறுநாள் தன் ஊருக்குப் புறப்பட்ட பியூலாவை யாரும் தடுக்கவில்லை. பிரிந்த குடும்பத்தை இணைத்து விட்டோம் என்ற மகிழ்வில் பள்ளிக்கு வந்துசேர்ந்த ஜெபசிங், ஒரு குடும்பம் பிரியவும் தான் காரணமாகி விட்டதை அறிந்தார்.

இதன் தொடர்ச்சி   மணமிக்க மணவாழ்வு!  என்ற தலைப்பில் உள்ளது.

இந்த கதை  இலட்சிய தீபம் என்ற புத்தகத்திலிருந்து   Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.



Topics: Tamil Christian Story Latchiya Deepam - Story

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download