ஒரு தலைவரை ஆயத்தமாக்குதல்

பொதுவாக ஜனங்கள் ஏதோ யோசேப்பு  ஒரே நாளில் எகிப்தின் அதிகாரியாக ஆனார் என்று நினைக்கிறார்கள், அதுவும் பார்வோனுக்கான சொப்பனத்தை விளக்குவதற்காக! உண்மையைச்  சொல்லப் போனால், தேவன் யோசேப்பை ஒரு தலைவராக ஆயத்தம் செய்தார்.

தெய்வபயம்:
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் (நீதிமொழிகள் 1:7). ஆம், யோசேப்பு, தேவனுக்குப் பயந்து, அவருடைய பிரசன்னத்தில் வாழ ஆரம்ப காலத்திலேயே கற்றுக்கொண்டான். யோசேப்பு தன் கொள்ளுத்தாத்தாவான ஆபிரகாமிற்கு தேவன் கொடுத்த கட்டளையான "நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு" என்பதை அறிந்திருந்தான் (ஆதியாகமம் 17:1). 

சத்தியத்தைப் பேசு:
உண்மை என்னவோ அதைச் சொல்ல யோசேப்பு பயப்படவில்லை.  தவறான வழியில் செல்பவர்களுமான பொல்லாதவர்களுமான தன் சகோதரர்களைப் பற்றி தன் தந்தை யாக்கோபிடம் தெரிவிப்பது தன் கடமை என்று அவன் உணர்ந்தான் (ஆதியாகமம் 37:2). இது அவனுடைய சகோதரர்களை எரிச்சலூட்டியது.  யோசேப்பு தன் சகோதரர்கள்  திருந்தினவர்களாக, ஒரு நல்ல தெய்வீக வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று மாத்திரமே விரும்பினான்.

பாவத்திலிருந்து ஓடு:
யோசேப்பு போத்திபார் வீட்டில் விசாரணைக்காரனாக அதாவது மிகவும் மதிப்புமிக்க தலைமை மேலாளர் அந்தஸ்தைப் பெற்றிருந்தான். அவன் அழகாகவும், மிகவும் திறமையானவனாகவும், மகிழ்ச்சிகரமான ஆளுமையாகவும் இருந்ததால், போத்திபாரின் மனைவி அவனுடன் உடலுறவு கொள்ள விரும்பினாள்.  அவளது மயக்கும் வற்புறுத்தல்கள் அவனை சத்தியத்தின் பாதையிலிருந்து விலக்கவில்லை;  உணர்வுகளில் மூழ்கடிக்க தன் சிந்தனையை அனுமதிக்காமல் சரியான சிந்தனையின் மூலம் தனது சரீரத்தை கட்டுப்படுத்தினான்.  யோசேப்பின் கூற்றுப்படி, விபச்சாரம் தேவனுக்கும், போத்திபாருக்கும் மற்றும் போத்திபாரின் மனைவிக்கும் எதிரான பாவம் (ஆதியாகமம் 39:8-9). 

மற்றவர்களுக்கு உதவுங்கள்:
யோசேப்பு தனது துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளுக்காக சிணுங்கி அழவில்லை, கலங்கி நிற்கவில்லை. ஒவ்வொரு சூழ்நிலையையும்  நல்லதைச் செய்ய கிடைக்கின்ற வாய்ப்பாக அதை பயன்படுத்தினான், அதுமாத்திரமல்ல எது சரியானது மற்றும் உயர்வான இடத்திற்கு எது கொண்டு போகுமோ அதை கருத்தில் கொண்டான்.  சிறையில், கனவுகளை விளக்குவதன் மூலம் மற்றவர்களுக்கு உதவும் நற்குணத்தை தெரிவு செய்தான் (ஆதியாகமம் 40). ஆம், உடனிருந்த சக கைதிகளிடம் அவன் பச்சாதாபம் காட்ட முடியாவிட்டால், எகிப்தியப் பேரரசின் குடிமக்களிடம் அவன் எப்படி அனுதாபம் காட்ட முடியும்?

ஆயத்தமாக இருத்தல்:
யோசேப்பு எப்போதும் உயர்ந்த சேவைக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டான்.  எகிப்தியர்களின் மொழி, விஷயங்களை நிர்வகித்தல், மக்களை நிர்வகித்தல், போத்திபாரின் வீட்டில் பொறுப்பு  என ஒவ்வொரு சூழலிலும் கற்பவனாக இருந்தான். பார்வோனின் கைதிகளுடனான உரையாடல்கள் நடத்தியது, பார்வோனின் வேலைக்காரர்களிடமிருந்து அரண்மனை நிர்வாகம், பேரரசு நிர்வாகம் மற்றும் பார்வோனின் மன்றத்தின் நெறிமுறைகள் பற்றிய சிறப்பு அறிவைப் பெற அவனுக்கு உதவியது.

திறந்த கதவு:
மனிதகுல வரலாற்றிலும் மீட்பின் வரலாற்றிலும் யோசேப்பு தனது கருவியாக இருப்பதற்கான அற்புதமான வாய்ப்பை தேவன் திறந்து வைத்தார்.

தேவன் என்னை ஒரு பெரிய பணிக்காக ஆயத்தப்படுத்துகிறாரா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download