நோவாவின் காலத்தில் எத்தனை பேர் வாழ்ந்தார்கள் என்பதைக் குறித்து வேதாகமத்தில் எவ்வித பதிலும் இல்லை. ஆனால் அந்த நேரத்தில் மக்கள் தொகையின் மதிப்பீடு 7.50 லட்சத்திலிருந்து 70 லட்சம் வரை இருக்கலாம். பேழையில் இருந்த எட்டு பேரைத் தவிர மற்ற அனைவரும் அழிந்து போனார்கள் எனில் தேவன் மக்களை நியாயந்தீர்த்தார் (ஆதியாகமம் 6,7,8). பேதுரு வரலாற்று நிகழ்வை உறுதிப்படுத்தி, எட்டு பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டதை உறுதி செய்கிறார் (1 பேதுரு 3:20). நோவா தேவனுக்குக் கீழ்ப்படிந்து, மழையையும் பார்த்தது இல்லை, கப்பல் கட்டும் செயல்முறையையும் பற்றி அறியாமலும் ஒரு பேழையைக் கட்டினார். அவருடைய விசுவாசத்திற்கு வெகுமதி கிடைத்தது, அவரும் அவருடைய மனைவியும் மூன்று மகன்களும் அவர்களது வாழ்க்கைத் துணைகளுடன் இரட்சிக்கப்பட்டனர். நீரோட்டத்தின் நடுவே பேழை அடைக்கலம் போல் இருந்தது. இரத்த சாட்சியான புனித ஜஸ்டின் பேழையை சிலுவையுடன் ஒப்பிடுகிறார் மற்றும் நோவாவை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஒரு வகையாக ஒப்பிடுகிறார்.
வாக்குத்தத்தம்:
ஜலப்பிரளயத்தின் போது நோவாவுக்கும் அவருடைய குடும்பத்தின் எதிர்காலத்திற்கும் தேவன் பாதுகாப்பை உறுதியளித்திருந்தார். பூமியில் வசிப்பவர்கள் அனைவரும் ஆதாம் மற்றும் ஏவாளின் வழித்தோன்றல்கள். வெள்ளத்திற்குப் பிறகு, வரலாற்றில் எல்லா மனிதர்களும் நோவாவின் வழித்தோன்றல்கள்.
பிரசன்னம்:
பேழை தேவனின் பிரசன்னத்தின் இடமாக இருந்தது. அவருடைய பிரசன்னம் இல்லாமல், நோவாவும் அவரது குடும்பத்தினரும் தங்களைச் சுற்றி நிகழ்ந்த பேரழிவு மற்றும் அழிவின் சூழ்நிலையிலிருந்து வெளியில் வந்திருக்க முடியாது. தேவனின் ஆறுதல் மற்றும் உறுதியளிக்கும் பிரசன்னம் நோவாவையும், அவனது குடும்பத்தையும் மற்றும் மனிதனுக்கு கீழான அனைத்து உயிரினங்களும் தாங்கியது.
காப்பாற்றுதல்:
பேழைக்கும் அதில் இருந்த அனைவருக்கும் தேவன் பாதுகாப்பு அளித்தார். அனுபவமற்ற ஒருவர் கட்டிய பேழை (கப்பல்) கவிழவில்லை, ஆனால் அதே நேரத்தில் அனுபவமுள்ள தொழில் வல்லுநர்கள் குழுவாக சேர்ந்து கட்டிய டைட்டானிக் மூழ்கியது!.
வழங்குதல்:
நோவா பேழையில் நீண்ட காலம் தங்கியதற்கு போதுமான உணவை சேகரித்தாரா? மழையை அனுபவித்து தண்ணீர் வடியும் வரை காத்திருக்க வேண்டிய நாட்களின் எண்ணிக்கை நோவாவுக்குத் தெரியாது. ஆனால் நோவா சேகரித்ததை தேவன் ஆசீர்வதித்தார், அது குடும்பத்திற்கும் பேழையில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் போதுமானதாக இருந்தது. ஐயாயிரம் பேருக்கும் மேற்பட்டவருக்கு ஐந்து ரொட்டிகளையும் இரண்டு மீன்களையும் போஷிப்பது போல இருந்தது.
பாதுகாப்பு:
சரியான காற்றோட்டம் இல்லை? குப்பைகளை அகற்றுவது எப்படி? இதில் பேழை எவ்வளவு சுகாதாரமாக இருந்தது? குடும்ப உறுப்பினர்களில் யாருக்காவது கடல் பயண ஒவ்வாமை இருந்ததா? வேறு ஏதேனும் தொற்றுகள் அல்லது உடல்நலக் கேடுகள் இருந்ததா? ஆனாலும் தேவன் அவர்கள் அனைவரையும் காப்பாற்றினார் அல்லவா.
நான் அவரிடம் அடைக்கலம் புகுந்துள்ளேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்