மோசே ஒரு மலைப்பயணி

மோசே சீனாய் மலையில், குறைந்தது எட்டு முறை சுமார் 2285 மீட்டர் ஏறினான்.  இது ஒரு சாகசப் பயணம் அல்ல, ஆனால் தேவனின் கட்டளைகளைப் பெறுவதற்கான ஒரு ஆவிக்குரிய பயிற்சி.

பொக்கிஷம்:
"நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைகொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது. நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டிய வார்த்தைகள் என்றார்" (யாத்திராகமம் 19:5‭-‬6). 

 உறுதி:
 இஸ்ரவேல் சந்ததியினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்தியை மோசே எடுத்துக்கொள்கிறான் (யாத்திராகமம் 19:7-8).

இஸ்ரவேலர்களின் பரிசுத்தம்:
தேவன் மோசேயிடம் பேசினார், அவர் இறங்கி வரும் போதான  கர்த்தரின் தோற்றத்திற்காக தேசத்தைப் பிரதிஷ்டை செய்தான்.  கர்த்தர் சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கினபடியால், அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது (யாத்திராகமம் 19:10-19).

எங்களிடம் பேச வேண்டாம்:
நான்காவது முறை மோசே ஆரோனுடன் கர்த்தரால் அழைக்கப்பட்டான் (யாத்திராகமம் 19:20-25). தேவன் பத்து கட்டளைகளை முழு தேசத்திற்கும் கேட்கும்படி வழங்கினார்; இஸ்ரவேலர்கள் பயந்து, மோசேயிடம்  "நீர் எங்களோடே பேசும், நாங்கள் கேட்போம்; தேவன் எங்களோடே பேசாதிருப்பாராக, பேசினால் நாங்கள் செத்துப்போவோம் என்றார்கள்" (யாத்திராகமம் 20:19).  

பிரமாணம் வெளிப்படுத்தப்பட்டது:
மோசே ‘அடர்ந்த இருளில்’ (கார்மேகம்) தேவனை அணுகினான் (யாத்திராகமம் 20:21). மேலும் தேவன் பல்வேறு பிரமாணங்களை வெளிப்படுத்தினார் (யாத்திராகமம்  21-23).

ஐக்கியம்:
மோசே ஆரோன், அவருடைய மகன்கள் நாதாப், அபியூவும் மற்றும் இஸ்ரவேலின் மூப்பரில் எழுபது பேருடனும் சென்றார்.  அவர்கள் ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களைக் குறிக்கும் பன்னிரண்டு தூண்களை அமைத்தனர்;  மற்றும் சர்வாங்க தகனங்களையும் சமாதான பலிகளையும் செலுத்தினர் (யாத்திராகமம் 24: 1,4,7).தேவனே ஆயத்தம் பண்ணின பத்துக் கட்டளைகளைப் பெற மோசே மாத்திரம் அங்கேயே இருந்தான் (யாத்திராகமம் 24:12). யோசுவா அவனுடன் செல்கிறான்.  ஆறு நாட்களாக மேகங்கள் சூழ்ந்திருந்ததால் அவர்களால் நெருங்கி நுழைய முடியவில்லை.  பின்னர் "மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து, மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பதுநாள் மலையில் இருந்தான்" (யாத்திராகமம் 24:18). உடன்படிக்கைப் பெட்டி மற்றும் கூடாரம் பற்றிய அறிவுரைகளையும் கர்த்தர் கொடுத்தார் (யாத்திராகமம் 24 முதல் 31 வரை). மோசேயும் யோசுவாவும் இறங்கும்போது, ​​ஆரோனும் மக்களும் தங்கக் கன்றுக்குட்டியை வணங்குவதைக் கண்டார்கள்.  மோசே பத்துக் கட்டளைகள் உள்ள இரண்டு கற்பலகைகளை மலையின் அடியிலே எறிந்து உடைத்துப் போட்டான் (யாத்திராகமம் 32:19).

 பரிந்துரை:
 இஸ்ரவேலர்களை மன்னிக்க வேண்டும் என்றும் அல்லது 'ஜீவ புஸ்தகத்திலிருந்து’ தன்னுடைய பெயரை நீக்கும்படி தேவனிடம் பரிந்து பேசினான் மோசே. "தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் என்றான்" (யாத்திராகமம் 32:32). 

தேவன் எழுதுகிறார்:
தேவன் கட்டளையிட்டபடி மோசே இரண்டு கற்பலகைகளுடன் சென்றான் (யாத்திராகமம் 34:1-2). தேவனின் எழுதப்பட்ட பத்துக் கட்டளைகளைப் பெற மோசே 40 பகலும் 40 இரவுகளும் ரொட்டியும் தண்ணீரும் இல்லாமல் உபவாசம் இருந்தான்.  இறங்கி வரும்போது அவன் முகம் பிரகாசமாக இருந்தது (யாத்திராகமம் 34:28-30).

 நான் மோசேயைப் போல் உண்மையுள்ள ஒரு நபரா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download