ஒழுக்க நெறிகள் Vs பொருளாசை
இந்தியாவில் ஒரு சிறிய நகரத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் கனவுகளின் நகரமான மும்பைக்குச் செல்கிறாள்.  ‘பாலிவுட்’ அல்லது 'மாடலிங்' அல்லது 'பொழுதுபோக்குத் துறை' மூலம் பிரபலமடைய விரும்புவோர் தினமும் அந்நகரத்தை அடைகிறார்கள்.  மாடலிங், பேஷன் டிசைனிங், நாடகப் பள்ளி அல்லது நடிப்புப் பள்ளி ஆகியவை இந்திய சினிமாவின் ஆர்வமுள்ள ‘கலைஞர்களையும்’ மற்றும் எதிர்காலத்தில் இந்திய சினிமாவின் ‘மனித தெய்வங்களையும்' நிரப்புகின்றன.  அந்த இளம் பெண்  தைரியமாகவும் வெட்கமின்றியும் ஒரு நேர்காணலில் பின்வருமாறு கூறியுள்ளார் ; இந்த (கவர்ச்சியான) உலகில் உங்களுக்கு அழகிய உடலமைப்பும், நவீன ஆடைகளும்,  திறமையும் மற்றும் செக்ஸ் மீதான ஒரு விருப்பமும் அதாவது அதுவும் ஒரு பகுதியாக அமைகிறது. அப்படிதான்  தனது சமீபத்திய ஐபோனை அந்த பணத்தால் மட்டுமே வாங்க முடியும் என்றும் அப்பெண் சுட்டிக்காட்டியும் கூறினார்.  பின்னர் மும்பை நகர காவல் ஆணையாளர் கூறினார்: “சட்டப்படி, நாங்கள் செயல்பட முடியவில்லை.  இதெல்லாம் இப்போது ‘தன்னார்வ செக்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது.  இந்த குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் தேவை.  துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் நீண்ட தூரத்தில் வாழ்கிறார்கள், இந்த குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை”. பொருளாசை, பிரபலமாவதற்கான துடிப்பு, பெரிய ஆளாவதற்கான ஆர்வம், ஆடம்பர வாழ்க்கை, சொகுசான வாழ்க்கை, மக்களின் கைதட்டல், தங்களுக்கு ஒரு அடையாளத்தையும் தங்களுக்கென தனி வரம்புகளையும் உருவாக்குவது இன்றைய இளைஞர்களை அழிக்கும்  மோசமான சக்திகள்.

 வேதாகமத்தின் அறிவுரை என்ன தெரியுமா; “சத்தியத்தை வாங்கு,  அதை விற்காதே" என்பதே (நீதிமொழிகள் 23:23). யோசேப்பும் வீட்டிலிருந்து வெகு தூரமாக, கண்காணிக்கப்படாத அளவில் தான் இருந்தான்.  அப்படியிருந்தும், போத்திபாரின் மனைவி அவனை பாவத்திற்கு இழுத்தபோது அவன் அப்படி எதுவும் செய்யாமல் அவ்விடம் விட்டு ஓடினான் (ஆதியாகமம் 39: 1-20).  அவனுக்கும் தன் வாழ்வைப் பற்றிய கனவு இருந்தது ஆனால் எக்காரணம் கொண்டும்  அதை பாலியல் இன்பத்திற்காகவோ அல்லது எந்தவொரு பொருளாசைக்காகவோ அல்லது சொகுசான வாழ்க்கைக்காகவோ தனக்குள் இருக்கும் சத்தியத்தை  இழக்கவில்லை.

 இளம் கிறிஸ்தவ சீஷர்கள் தங்களை எவ்வாறு பரிசுத்தமாக வைத்திருக்க முடியும்?  ஒழுக்கம் சார்ந்த தார்மீக காரணங்களுக்காகவோ அல்லது பொருள்சார்ந்த ஈர்ப்பிற்காகவோ அல்லது இச்சைக்காகவோ ஒரு போராட்டம் இருக்கும்போது;  அவர்கள் தப்பியோடாமல் வெளியே வர முடியுமா?  சுயஒழுக்கத்திற்காக வேதம் என்னும் வழிகாட்டியை மனதில் பதிவிறக்கம் செய்து இதயத்தில் அவை 'பாதுகாப்பு பெட்டகமாக’  காத்துக் கொள்ள வேண்டியது அவசியம் (சங்கீதம் 119: 9).  இல்லையென்றால், எரேமியா தீர்க்கத்தரிசி எச்சரிப்பது போல அவர்களின் இதயம் வழிதவறும்.  (எரேமியா 17:10)

 தேவனுடைய வார்த்தையை என் இதயத்தில் பதிவிறக்கம் செய்துள்ளேனா?  என சிந்திப்போம்.

Author: Rev. Dr. J .N. மனோகரன்