ஒரு கிறிஸ்தவத் தலைவர், உபத்திரவம் அதிகரித்துள்ளதால், அனைத்து கிறிஸ்தவர்களும் சுவிசேஷத்தில் ஈடுபட வேண்டாம் என்றும், அனைத்து அருட்பணி ஊழியர்கள் மற்றும் கிராமப்புற அருட்பணி வேலைகளை செய்வோரையும் கூட நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார். அவரைப் பொறுத்தவரை: கிறிஸ்தவர்கள் நற்செய்தியைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் மற்ற நம்பிக்கைகளைப் பின்பற்றும் மக்களை புண்படுத்துகிறார்கள்.
உப்பு மற்றும் வெளிச்சம்
மூன்று அணுகுமுறைகள் உள்ளன: மாசுபடாமல் காத்துக் கொள்ளுதல், தனிமைப்படுத்தல் மற்றும் ஊடுருவல். எந்தவொரு அர்த்தமுள்ள உரையாடலையும் எதிர்கொண்டு, சபை உலகத்திலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளலாம். சபை மற்ற மதங்களின் வேறுபாடுகள், சவால்கள் மற்றும் அவற்றின் இருப்பை ஒப்புக் கொள்ளலாம், ஆனால் ஈடுபட மறுக்கிறது. தேவசபை உப்பு அல்லது வெளிச்சம் போல ஊடுருவி சமூகத்தில் ஈடுபடலாம். (மத்தேயு 5:14-16) ஒருமுறை உப்பிட்ட உணவை உப்பில்லாமல் ஆக்க முடியாது. அதேபோலத்தான், ஒரு சமூகத்திலோ அல்லது தேசத்திலோ கிறிஸ்தவம் உள்ளதா?
எப்போதும் தயார்
மற்ற கலாச்சாரங்கள், மதங்கள் மற்றும் உலகக் கண்ணோட்டங்களுடன் உலகில் ஈடுபடுவது கடினமான பணியாகும். பல வழிகளில் தயாராக வேண்டிய அவசியம் உள்ளது. (I பேதுரு 3:15-16) அதற்கு, ஒரு சீஷர் செய்ய வேண்டிய பல பரிமாண ஆயத்தங்கள் தேவைப்படுகின்றன. துரதிர்ஷ்டவசமாக, போதகர்கள் மற்றும் மிஷனரிகள் உட்பட பல தலைவர்கள் தயாராக இல்லை அல்லது பயிற்சி பெற்றவர்களாக இல்லை.
ஆயத்தப்படுதல்
முதலாவதாக, மனத்தாழ்மை, மற்றவர்களை கண்ணியத்துடன் நடத்துதல் மற்றும் மரியாதையான உரையாடலில் ஈடுபடுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆவிக்குறிய ஆயத்தப்படுதல் ஆகும்.
இரண்டாவதாக, உயர்வு மனப்பான்மை இல்லாத ஆனால் கர்த்தரின் கிருபையைப் பெறுபவரின் அணுகுமுறை கொள்ள உளவியல் ரீதியாக ஆயத்தப்படுதல்.
மூன்றாவதாக, மனதைப் புதிதாக்கி, மற்றொரு நபரின் கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்ள உதவும் வேதத்தின் சத்தியத்தை அறிந்துகொள்வதற்கான மன ரீதியாக ஆயத்தப்படுதல். பவுல் வேதத்தைத் தாண்டி மற்ற இலக்கியங்களிலிருந்தும் கூட மேற்கோள் காட்டத் தயாராக இருந்தார்.
நான்காவதாக, வெற்றியின் மனப்பான்மையைக் காட்டிலும் மீட்பின் மனப்பான்மையைக் கொண்டிருப்பது மற்றும் பிறர் உணர்வுகளைப் புண்படுத்தாமல் இருக்க உணர்வுப்பூர்வமான ஆயத்தம்.
ஐந்து, வேதாகமத்தின் ஆழமான சத்தியங்களையும் தேவனின் பண்புகளையும் புரிந்துகொள்வதற்கான இறையியல் ஆயத்தம்.
ஆறு, மற்றவர்கள் சுதந்திரமாக அவர்கள் விரும்பிய தேர்வுகள் மற்றும் முடிவுகளை எடுக்க அனுமதிக்கும் விதமான சமூக ரீதியான ஆயத்தம். கருத்துக்களைத் திணிக்காமல், சத்தியத்தைத் தாழ்மையுடன் முன்வைக்க வேண்டும்.
ஏழு, பொது நலனுக்காகவும், சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகவும், மனிதர்களின் மேம்பாட்டிற்காகவும் அனைவருடனும் இணைந்து பணியாற்ற ஆயத்தமாக இருங்கள்.
எட்டு, மூன்றே நிமிடங்கள் போன்ற குறுகிய நேரத்திலும், நீண்ட நேரம் விளக்கமான முறையில் பகிர வாய்ப்புக் கிடைத்தாலும், நமது வாழ்க்கை சாட்சியை அல்லது இயேசுக் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்வதற்கான நடைமுறை ஆயத்தம். திரன்மிகு முறையில் அவற்றைப் பகிரந்து கொள்ள அதை எழுதி மனப்பாடம் கூட செய்து கொள்ளலாம்.
நான் சுவிசேஷத்தை தெளிவாகவும் சுருக்கமாகவும் பகிர்ந்துகொள்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்