நியாயதிபதிகளின் காலத்தில் இஸ்ரவேலில் ஏற்பட்ட வறட்சி மற்றும் பஞ்சத்திற்கு பயந்து நகோமியும் எலிமெலேக்கும் தங்கள் இரண்டு மகன்களுடன் (மக்லோன் மற்றும் கிலியோன்) மோவாபிற்கு குடிபெயர முடிவு செய்கிறார்கள் (ரூத் 1: 1-3). தேவைகள் சந்திக்கப்பட வேண்டும் செழிப்பான வாழ்வு வேண்டும் என்ற எண்ணத்திலும் தங்கள் கனவை துரத்தி செல்கிறார்கள். அதன் விளைவு என்னவோ பேரழிவாக தான் இருந்தது. மன உறுதியும் நம்பிக்கையும் கொண்ட ஒரு பெண்மணி, தனது இரண்டு மகன்களுக்கும் திருமணம் செய்து வைத்தார், ஆனால் சூழ்நிலை இரண்டு மகன்களும் இறந்தனர்; மிக கொடுமையல்லவா! ஆக இப்போது நகோமி, ஒர்பாள் மற்றும் ரூத் என விதவைகளாக மூவர் குழுவானார்கள் .
இந்த சூழ்நிலையில் இஸ்ரவேல் தேசத்தில் ஆசீர்வாதமான மழை என்றும், நல்ல அறுவடை என்றும் தேவன் தன் ஜனங்களுக்கு ஆகாரம் அளித்தார் என்றும் கேள்விப்படுகிறார்கள். ஆதலால் நாம் இஸ்ரவேல் தேத்திற்கு திரும்பி விடலாம் என நகோமி முடிவு செய்கிறாள். இது ஒரு நேர்மாறான இடம்பெயர்வு என்றும் சொல்லலாம். நகோமி தன் இரண்டு மருமகள்களையும் அவரவர் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லுமாறு ஆலோசனையளித்தாள். இளையவளான ஒர்பாள் தன் பிறந்த வீட்டிற்கு திரும்பினாள். அதே நேரத்தில் மூத்தவளான ரூத் நகோமியோடு ஒட்டிக்கொள்ள முடிவு செய்கிறாள்.
பல துரதிர்ஷ்டங்களைச் சந்தித்த நகோமியுடன் ரூத் இஸ்ரவேலுக்கு குடிபெயர்கிறாள். நகோமி பத்து வருடங்களுக்குள் மூன்று மரணங்களை அனுபவித்திருந்தாள். ஆயினும்கூட, ரூத் நகோமியுடன் இஸ்ரவேலுக்குச் செல்ல விரும்புகிறாள். அவள் நகோமியைப் போன்று உலகத்தின் கனவைப் பின்தொடர நினைத்தாளா? ஏனெனில், நகோமியின் வாழ்க்கையில் தான் வியத்தகு அதிசயங்களோ அல்லது அற்புதங்களோ என எதுவும் இல்லையே. அநேகமாக, நகோமி ஒவ்வொரு சூழ்நிலையையும் எவ்வளவு மன தைரியத்துடனும் விசுவாசத்துடனும் கையாண்டாள் என்ற அணுகுமுறையை மாத்திரம் ரூத் பார்த்திருக்க வேண்டும்.
சத்தியத்தைத் தேடுவதில் இருக்கும் புலம்பெயர்வு விசுவாசமானது என்பதை பின்வரும் அறிக்கை தெளிவுபடுத்துகிறது: ரூத் நகோமியிடம் தெரிவித்தது; "நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன். நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்படுவேன்; மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள்" (ரூத் 1:16-17). தேவனையும் சத்தியத்தையும் அறிந்துக் கொண்ட பின் மரிப்பது என்பதுதான் மதிப்புமிக்கது என்று ரூத் புரிந்து கொண்டாள்.
மக்கள் நகோமியை ஆசீர்வதித்தபோது, ரூத் ஏழு மகன்களுக்கு சமம் என்று சொன்னார்கள். மேசியாவைப் பற்றிய குடும்பப் பட்டியலை எடுத்தோமேயென்றால் அதில் மூதாதையர்களில் ரூத் ஒருவராக இருக்கிறார் (ரூத் 4:15). அப்படி ரூத் காணப்படுவதற்கு ஆவிக்குரிய வழிகாட்டியாக இருந்தவர் நகோமி மற்றும் நகோமியும் தன் வாழ்வில் தேவன் மீட்பரென்றும், புதுப்பிக்கிறவரும், மீட்டெடுப்பவரும், எவரையும் பறம்பே தள்ளாதவர் என்பதையும் நகோமி நன்கு அறிந்து வைத்திருந்தாள்.
நம் இடம்பெயர்வு கனவுகளை பின் தொடர்ந்தா? அல்லது சத்தியத்தை பின் தொடர்ந்ததா? சிந்திப்போமே.
Author : Rev. Dr. J. N. Manokaran