"எருசலேமின் குமாரத்திகளே! கேதாரின் கூடாரங்களைப்போலவும் சாலொமோனின் திரைகளைப்போலவும், நான் கறுப்பாயிருந்தாலும் அழகாயிருக்கிறேன்"
(உன்னதப்பாட்டு 1:5).
மணவாட்டி தன் ஸ்நேகிதிகளிடம் தான் கறுப்பு என்பதை வெகு தாழ்மையுடன் ஒத்துக்கொள்கிறாள், அவள் தன்னை பெருமையாக, தான் "வெள்ளை" - பரிசுத்தம் - என்று கூறவில்லை! இன்னும் தன் நிலையை அதிகம் தாழ்த்துகிறாள். "கேதாரின் கூடாரங்கள் போலவும் சாலமோனின் கூடாரங்கள் போலவும்" என்று தன் கறுமை நிறத்தை அவைகளுக்கு ஒப்பிட்டு உள்ளபடியே கூறுகிறாள்! தன்னுடைய அழகற்ற நிலையை முதலில் தன் தோழிகளிடம் வெளிப்படையாக சொன்னப்பின்னரே தன் நேசரிடம் தன்னைப்பற்றி கூறப்போகிறாள். தேவப்பிள்ளைகளோடு நம் "கறுப்பான" உள்ளங்களின் "அழகற்ற" தன்மைகளை பகிர்ந்து கொள்ளுதல் எத்தனை அவசியமாயிருக்கிறது! இந்நாட்களில் நாம் அப்படி செய்கிறதுண்டா?
"சீயோன் குமரத்திகளான" தன் தோழிகளான விசுவாசிகளிடம், நம் பரிசுத்தத்தைப்பற்றி (நம் உள்ளம் வெண்மையாயிருக்கிறதென்று) எத்தனை பெருமையினால் பேசி தேவனை பொய்யாராக்குகிறோம்"
"நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது". (I யோவான் 1 :10). நம் ஜெபத்தோழர்களிடமும் (தோழிகளிடமும்) "நான் கறுப்பாயாயிருக்கிறேன்," என்று சொல்லத்தான் போகிறாய்! அதற்குத்தான் அழைத்திருக்கிறார். "நான் கறுப்பாயிருந்தாலும் அழகாயிருக்கிறேன்," மணவாட்டி இப்படிச்சொல்வதால், தன் நேசரின் பார்வையில், தான் கறுப்பாயிருந்தாலும் அழகியாய் காணப்படுகிறான் என்பதை குறிப்பிடுகிறாள்! மனிதரின் பார்வையில் நீங்கள் "கறுப்பான" வர்களாய் (குற்றவாளிகளாய்) காணப்படலாம். ஆனால் நீங்கள் யேசுக்கிறிஸ்துவுக்கு உங்களை முற்றிலும் அர்ப்பணித்து விட்டபின் அவரது பார்வையில் நீங்கள் அழகுள்ளவர்கள்!
(மொழியாக்கம் by Caroline Jeyapaul)