பெரிய சாத்தியமும் பெரும் பேரழிவும்

திறமையான, வரமுள்ள, சரியான அணுகுமுறையுடன் கூடிய பலர் உள்ளனர்.  அவர்களின் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் பங்களிப்புக்கான சாத்தியங்கள் மகத்தானவை.   அவர்கள் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்கிறார்கள்; இருப்பினும் அவர்கள் பிரகாசிப்பதில்லை. துரதிர்ஷ்டவசமாக, அவர்களில் சாலொமோன் ராஜாவும் ஒருவர்.   “இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் இதினாலே பாவஞ்செய்தானல்லவா? அவனைப்போன்ற ராஜா அநேகம் ஜாதிகளுக்குள்ளே உண்டாயிருந்ததில்லை; அவன் தன் தேவனால் சிநேகிக்கப்பட்டவனாயிருந்தான்; தேவன் அவனை இஸ்ரவேலனைத்தின் மேலும் ராஜாவாக வைத்தார்; அப்படிப்பட்டவனையும் மறுஜாதியான ஸ்திரீகள் பாவஞ்செய்யப்பண்ணினார்களே” (நெகேமியா 13:26) என்பதாக நெகேமியா எழுதுகிறார்.

புத்திக்கூர்மை:  
சாலொமோனுக்கு மிகுந்த ஞானம் இருந்தது, அவனுடைய ஜெபங்களுக்கு பதிலளிக்கும் விதமாக தேவனால் வரமாக அளிக்கப்பட்டது.  பாடல்கள், நீதிமொழிகள் மற்றும் பிற இலக்கியங்கள் என வாழ்க்கையை அவன் கணித்த விதம் மற்றும் அதைக் குறித்து அவன் எழுதிய விதம் அவனது அறிவுக்கு சான்றாகும். 

ஆவிக்குரிய காரியம்:  
சாலொமோன் தேவனுக்குப் பிரியமானவன் என்று நெகேமியா கூறுகிறார். கர்த்தர் அவன் மீது இரக்கமும், தயவும், அன்பும் கொண்டவராக இருந்தார்.  ஆனால்  சாலொமோன் தேவனிடம் அதே அன்பை திரும்ப செலுத்தவில்லை, மாறாக தனது அன்பை புறஜாதி மற்றும் தேவனை அறியாத அல்லது நேசிக்காத பல மனைவிகளிடம் காட்டினான். தாவீது கட்ட நினைத்த ஆலயத்தை சாலொமோன் எருசலேமில் பெரிதாக கட்டினான்.

அரசியல்:  
சாலொமோன் தனது தந்தையின் ஆட்சியைப் போலல்லாமல் அரசியல் ஸ்திரத்தன்மையையும் அமைதியையும் அனுபவித்தான்.  இது நிச்சயமாக, தேவனின் கிரியை மற்றும் வரம் அல்லாமல் வேறில்லை.  சமாதானமான சூழலில், அவன் பொருளாதாரத்தில் வளர்ச்சியை வழங்கிட முடியும், மேலும் தனக்கும் அவனது மனைவிகளுக்கும் அரண்மனைகளை உருவாக்க முடியும்.

நிர்வாகம்:  
அவனது நிர்வாகம் வித்தியாசமாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது.  ஐக்கிய இராஜ்ஜியத்தில், வர்த்தகம் மற்றும் பொருட்கள் மற்றும் யோசனைகளின் பெரும் பரிமாற்றம் இருந்தது.  

பொருளாதாரம்:  
சாலொமோன் ஒரு வளமான பொருளாதாரத்தைக் கொண்டிருந்தான். அவன் தனது அரண்மனையிலும் விருந்தினர் மாளிகையிலும் பயன்படுத்திய அனைத்து பாத்திரங்களும் தங்கம்.   சாலொமோனின் நாட்களில், வெள்ளி எதுவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை (1 இராஜாக்கள் 10:21).

நற்பெயர்:  
அவனது புகழ் உலகம் முழுவதும் பரவியது.  சாலொமோனின் ஆட்சியின் மகிமையைக் கேள்வியுற்ற சேபாவின் ராணி சாலொமோனைச் சந்திக்க வந்தாள் (1 இராஜாக்கள் 10:1-13). அவள் பெரும் பரிசுகளைக் கொண்டுவந்தாள், சுமார் ஆறு மாதங்கள் எருசலேமில் தங்கினாள், சாலொமோனிடமும் கற்றுக்கொண்டாள். 

திருமணம்:  
திருமணம் ஒரு புனிதமான உடன்படிக்கை என்ற சத்தியத்தை சாலொமோன் புறக்கணித்தான்.   அரசியல் கூட்டணியின் ஒரு கருவியாக அவன் அதை உருவாக்கினான், அது அவனது வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

 எல்லா இடர்களுக்கும் எதிராக நான் விழிப்புடன் இருக்கிறேனா? 

 Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download