வரலாற்றில் மிகவும் பிரபலமான கப்பல் விபத்து டைட்டானிக் ஆகும், இது 'தண்ணீரில் மூழ்காத' கப்பல் என்று கூறப்பட்டது, ஆனால் அதன் முதல் பயணத்திலேயே பனிப்பாறையில் மோதி மூழ்கியது. கப்பல் மூழ்கியதில் கேப்டன் மற்றும் அதிலுள்ள பயணிகள் உயிர் இழந்தனர். இதைப் போலவே ஒரு விசுவாசியும் தங்கள் விசுவாசம் என்னும் கப்பலை மூழ்கடிக்க முடியும். பாடுகள், கஷ்டங்கள், இன்னல்கள் மற்றும் சோதனைகள் போன்ற புயல் அடிக்கும்போது அதை எதிர்கொண்டு சரியான வழியில் செல்லத் தவறியவர்கள் கப்பல் விபத்துக்கு ஆளாகிறார்கள். அலெக்சந்தரும், இமெனெயும் மற்றும் பிலேத்தும் இதற்கு உதாரணங்களாகக் கூறப்பட்டனர் (1 தீமோத்தேயு 1:5,19; 2 தீமோத்தேயு 2:18). கடலின் நீரோட்டங்களையும் அலைகளையும் தாங்கும் வகையில் கப்பல்கள் உறுதியானதாக இருக்க வேண்டும். உலகில் கலாச்சாரத்தின் நீரோட்டங்கள், நாகரீகத்தின் அலைகள், போலி அறிவின் புயல்கள், மூடுபனி போன்ற பாவ ஒழுங்கீனங்கள் மற்றும் மாயை ஆகியவை உள்ளன. கப்பல்களுக்கு அடிக்கடி நிச்சயமாக சில திருத்தங்கள் தேவை.
1) தவறான போதனை என்னும் பனிப்பாறை:
வஞ்சக ஆவிகளைப் போதிப்பது, செழுமைக்கான ஆசைகளை தூண்டுவது, வம்சவரலாறுகள், மர்மங்கள், புராணங்கள், புனித மரபுகள், வெற்றுப் பேச்சுக்கள், பயனற்ற தத்துவங்கள், கட்டுக்கதைகள்... இவையே தவறான போதனைகளின் ஆதாரங்கள் (2 தீமோத்தேயு 4:2-4). தவறான (கள்ள) போதனை பொதுவாக சைவம் அல்லது பிரம்மச்சரியம் போன்ற ஒரு கவனத்தை கொண்டுள்ளது மற்றும் அனைவரும் இதை பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் அல்லது அது தெய்வீகமானவர் என்ற அந்தஸ்தைப் பெற்ற, உயர்ந்த ஒரு நபரை மையமாகக் கொண்டிருக்கலாம் அல்லது ஒரு வேதாகம வசனத்தை வலியுறுத்தி அதையே உச்சகட்டங்களுக்குப் பயன்படுத்துவதாக இருக்கலாம். உதாரணமாக, ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்துடன் வாழ்த்துவது என்பது சிதைந்து, பாலியல் உறவுகள் என்பது ஒரு வழிபாட்டு குழுவின் வழக்கமாகிவிட்டன (2 கொரிந்தியர் 13:12).
2) உலகக் கொள்கைகளின் பனிப்பாறை:
மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை மற்றும் ஜீவனத்தின் பெருமை என பாவ உலகத்தை ஆளும் கொள்கைகளின் ஆசைகள் பற்றி அப்போஸ்தலனாகிய யோவான் எச்சரிக்கிறார் (1 யோவான் 2:15-17). விசுவாசிகள் உலகத்தை ஜெயிக்க அழைக்கப்படுகிறார்கள். கர்த்தராகிய இயேசு சாத்தானை எதிர்கொண்டது போல், விசுவாசிகள் தேவ வார்த்தையான ஆவியின் பட்டயத்தை சாத்தானுக்கு எதிராகப் பயன்படுத்தத் தயாராக இருக்க வேண்டும் (மத்தேயு 4; எபேசியர் 6:11).
3) சிதைந்த மனசாட்சியின் பனிப்பாறை:
ஒரு விசுவாசியிடமிருந்து உண்மையான, நேர்மையான மற்றும் நல்ல மனசாட்சி எதிர்பார்க்கப்படுகிறது. மனசாட்சி கலகத்தனமான மனநிலையுடனும், பிடிவாதமான மனத்துடனும், கீழ்ப்படியாத இதயத்துடனும் இருக்கும் போது மனசாட்சி சிதைகிறது.
4) அலட்சியத்தின் பனிப்பாறை:
ஒரு விசுவாசி ஆவியானவரால் வழிநடத்தப்படாவிட்டால், இறுதியில் ஆவியின் உணர்வற்றவராக ஆகலாம். தேவ ஆவியைப் புறக்கணிப்பதும், அலட்சியமாக இருப்பதும் தூஷிப்பதற்கு சமம் என்பதை நினைவில் கொள்வோம்.
ஆவிக்குரிய பயணத்தில் நான் சரியான பாதையில் செல்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்