கிறிஸ்தவர்களாகிய நாம் இந்த உலகத்தின் கட்டளைகள், முறைகள், போக்குகள் மற்றும் மரபுகளை பின்பற்ற முடியாது. மாறாக சத்தியத்தின் மூலம்; தேவனுடைய வார்த்தையின் மூலம் புதுப்பிக்கப்பட்ட மனதைக் கொண்டிருப்பது மிக அவசியம் (ரோமர் 12:1,2). ஆனால் தீங்கானதும் பொல்லாததுமான பழக்க வழக்கம் என்னவெனில் சாதியை நம்புவதும் அதைக் கொண்டாடுவதும் ஆகும்.
1) சிருஷ்டிப்பு:
முதல் மனித ஜோடி ஆதாம் மற்றும் ஏவாள் (ஆதியாகமம் 1:27; 2:22). எல்லா மனிதர்களும் கலாச்சாரம் அல்லது தேசங்கள் அல்லது நிறம் அல்லது இனம் அல்லது ஜாதி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். சாதியை நம்புபவர்கள் தேவன் தான் மனித குலத்தின் சிருஷ்டிகர் என்பதை மறுக்கிறார்கள்.
2) அழைப்பு:
ஆபிரகாம் தனது குடியுரிமை (நாடு), மொழி, கலாச்சாரம் (மக்கள்) மற்றும் சாதி (குடும்பப் பெயர் மற்றும் கோத்திரம்) ஆகியவற்றை கைவிட வேண்டியிருந்தது (ஆதியாகமம் 12:1). இந்த அடையாளங்களுக்காக மக்கள் இறப்பதற்கும் மற்றவர்களைக் கொல்லவும் தயாராக இருக்கிறார்கள். ஆபிரகாமைப் பொறுத்தவரை, அது தேவனுடனான அவரது உறவு மற்றும் ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் தேவனுடனான உறவே மேலானது (யோவான் 1:12).
3) சிலுவை:
கர்த்தராகிய இயேசு பாவமுள்ள மனிதகுலத்திற்காக மரித்தார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவர்களை நேசித்ததால், அவர்களுக்காகத் தம் உயிரைக் கொடுத்ததால், எந்தவொரு நபரும், எந்த மக்கள் குழுவும் (சாதி அல்லது பழங்குடி அல்லது குலம்) பாகுபாடு காட்ட முடியாது.
4) சபை போதனை:
அப்போஸ்தலனாகிய பவுல் புறஜாதிகளுக்கு; "யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்"(கலாத்தியர் 3:28) என்று கற்பித்தார். புறஜாதி விசுவாசிகளிடம் பாகுபாடு காட்டிய அப்போஸ்தலனாகிய பேதுரு உட்பட யூத விசுவாசிகளை பவுல் கண்டனம் செய்தார் (கலாத்தியர் 2:11-14).
5) சபை நடைமுறை:
"அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாட விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தர்கள். அப்பொழுது பன்னிருவரும் சீஷர்கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவ வசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணை செய்வது தகுதியல்ல. ஆதலால் சகோதரரே, பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம்" (அப்போஸ்தலர் 6) என்றார்கள். அந்தியோகியாவில் உள்ள சபையில் அந்த நேரத்தில் மூன்று வெவ்வேறு கண்டங்களில் இருந்து ஐந்து தலைவர்கள் இருந்தனர். அப்போது அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. நீகர் என்று அழைக்கப்பட்ட சிமியோன் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர். யூதரான பர்னபா ஆசியாவைச் சேர்ந்தவர். சவுலுக்கு ரோமானியக் குடியுரிமை இருந்தது, அவரை ஒரு ஐரோப்பியர் என்று குறிக்கிறது (அப்போஸ்தலர் 13:1).
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்குக் கற்பித்ததும், நிரூபித்ததும் மற்றும் கட்டளையிட்டதுமான கொயினோனியா அன்பை (கிறிஸ்துவின் சரீரம்) அதாவது இந்திய திருச்சபை நல் ஐக்கியங்களைக் கடைபிடிக்க வேண்டும். அப்போது சபைகள் நம் தேசத்திற்கு உத்வேகமாக இருக்க முடியும்.
நான் யாரிடமாவது வேறுபாடு / பாகுபாடு காட்டுகிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran