கடந்த கால சங்கிலியை துண்டித்து கொள்

பலர் கடந்த காலத்துடன் இணைந்துள்ளனர், அதுவும் பழங்காலத்து வருஷங்களில் நடந்ததெல்லாம் அசை போடுவதுண்டு. இதனால், அவர்கள் கடந்த காலத்தின் கைதிகளாகி, நிகழ்காலத்திற்குப் பொருத்தமற்றவர்களாகி, எதிர்காலம், நித்தியம் பற்றிய நம்பிக்கையற்றவர்களாக மாறுகிறார்கள்.  அதில் லோத்தின் மனைவியும் ஒருவர், தேவனால் நியாயந்தீர்க்கப்பட்ட சோதோம் நகரத்திலிருந்து தப்பி ஓட முடியவில்லை.  கடந்த காலத்தின் மீதான அவளது பற்று அவளைத் திரும்பிப் பார்க்க வைத்தது, அவள் உப்பு தூணாக மாறினாள் (ஆதியாகமம் 19:26). கர்த்தராகிய இயேசு தம்முடைய சீஷர்களுக்கு கடந்த காலத்திற்குக் கட்டுப்பட்டு அவளைப் போல் ஆக வேண்டாம் என்று நினைப்பூட்டினார். அதைதான் “லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்” (லூக்கா 17:32) என்றார்.‌

பழையதை மறந்துவிடுதல்:
நினைவில் கொள்வதும் மறப்பதும் எல்லா மனிதர்களின் வாழ்விலும் சகஜம். இருப்பினும், ஒரு நபர் எதை நினைவில் வைத்துக் கொள்வது மற்றும் மறக்கத் தேர்ந்தெடுப்பது என்பது அவரது ஆவிக்குரிய வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. தேவனை நேசிப்பவர்கள், நடந்த தவறுகள், தோல்விகள், அவமானங்கள், காயங்கள், பரிகாசங்கள் மற்றும் வெற்றியை கூட மறந்துவிட விரும்புகின்றனர். ஆனால் அவற்றில் இருந்து கற்ற வாழ்க்கைப் பாடங்களை நினைவில் கொள்ளுங்கள். பவுல் கடந்த காலத்தை மறக்கத் தேர்ந்தெடுத்தார் (பிலிப்பியர் 3:14-16).

கடந்த காலத்தை விட்டுவிடுதல்:
பலரால் கடந்த காலத்தை மறக்க முடியாது. உணர்ச்சி கொந்தளிப்பு கள் அவற்றை முடக்குகின்றன, மேலும் அவர்களால் முன்னேற முடியாது.  புதிய வாழ்க்கையைத் தழுவுவது என்பது பழைய வாழ்க்கையில் இருந்து பிரிக்கப்பட வேண்டும், மறக்கப்பட வேண்டும், கைவிடப்பட வேண்டும் (2 கொரிந்தியர் 5:17).

எதிர்காலத்தை கணித்தல்:
ஆபிரகாமுக்கு இருந்தது போல் லோத்துக்கு நித்திய தரிசனம் இல்லை.  தேவனையும் அவருடைய வாக்குறுதிகளையும் அறிந்த ஆபிரகாம் நித்திய நகரத்தை எதிர்நோக்கி, “தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான்” (எபிரெயர் 11:10). பவுல் கிறிஸ்துவில் உயர்ந்த அல்லது மேல்நோக்கிய அழைப்பிலும் கவனம் செலுத்தினார்.  ஒருவேளை, லோத்துக்கு அந்த வகையான மகிமையான, நித்திய தரிசனம் இல்லை, மேலும் துரதிர்ஷ்டவசமாக அவரது மனைவி மற்றும் மகள்களுக்கும் கற்பிக்கத் தவறியிருக்கலாம். எனவே அவர்கள் அக்கால கலாச்சாரத்துடன் ஊறிப்போயினர் அல்லது பிணைக்கப்பட்டனர் எனலாம். 

முன்னோக்கிய அணிவகுப்பு:
லோத்தும், அவனுடைய மனைவியும், மகள்களும் மரணத்திலிருந்து விடுவிக்க அழைக்கப்பட்டனர்.  ஆபிரகாமின் ஜெபத்திற்கு கர்த்தர் பதில் அளித்தார்.  லோத் செல்ல விரும்பவில்லை, நீண்ட நேரம் காத்திருந்தான், மேலும் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  அவன் அப்படியே வெளியேறினாலும் தூரமாக ஓடுவதை விட்டுவிட்டு அருகில் இருக்கும் ஊரில் குடியேறினான் (ஆதியாகமம் 19:16-20). துரதிர்ஷ்டவசமாக, அவன் தனது மனைவியையும் இரண்டு மகள்களையும் அவர்களின் தாயையும் இழந்தான்.

விதி வலியதோ?!:
இரண்டு குமாரத்திகளும் லோத்தை குடிகாரனாக்கி, அவன் மூலமாக குமாரர்களைப் பெற்றார்கள், அவர்களுடைய சந்ததியினர் மோவாபியர்களும் அம்மோனியரும் ஆனார்கள் (ஆதியாகமம் 19:30-38).

நான் முன்னோக்கி செல்ல வேண்டுமா அல்லது பின்னோக்கிச் செல்லலாமா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download