"நான் அல்பாவும், ஓமெகாவுமாக இருக்கிறேன்" என்பதாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறினார் (வெளிப்படுத்துதல் 1: 8; 21: 6-7; ஏசாயா 44: 6; 48:12). 'நான் இருக்கிறேன்' என்பது ஏற்கனவே இருக்கிறவரைக் குறிக்கிறது அதாவது அவர் உருவாக்கப்பட்ட தெய்வமல்ல. கிரேக்க எழுத்துக்களில், முதல் எழுத்து அல்பா, கடைசி எழுத்து ஓமெகா. அல்பா, ஓமெகா என்ற வார்த்தைகளுக்கு “முதலும் கடைசியும்”, ‘ஆரம்பமும் முடிவும்’ என்று அர்த்தம். "பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்" என்பதாக சங்கீதக்காரன் சொல்கிறான் (சங்கீதம் 90: 2). எபிரெயர் 12: 1 ல் சொல்வது போல தேவனே நம் விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாய் இருக்கிறார். அது மாத்திரமல்ல அல்பா என்பது தரவரிசையின் அடிப்படையிலும் கூட மிகச் சிறந்ததைக் குறிக்கிறது எனலாம். உதாரணமாக: மேய்ப்பராக, அவர் ஒரு சிறந்த நல்ல மேய்ப்பர்; கட்டுவதில் அவர் மாஸ்டர். முழு வேதாகமத்திலும் அவர் அல்பா மற்றும் ஓமெகா என்பதை காண முடியும். ஆதியாகமத்தில் சிருஷ்டிகராகவும் மற்றும் வெளிப்படுத்துதலில் ராஜாதி ராஜாகவும் கர்த்தாதி கர்த்தாவாகவும் காணப்படுகிறார்.
1) இரட்சிப்பு:
அவருடைய கிருபையாலும் மற்றும் கிரியையாலும் நாம் விசுவாசத்தின் மூலம் இரட்சிக்கப்படுகிறோம் (எபேசியர் 2: 8-9). தேவன் தனது குமாரனான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்ற முனைப்பை எடுத்தார். அவருடைய பாடுகள், மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதல் மூலம் மனித இரட்சிப்புக்குத் தேவையான கிரியைகளை அவர் நிறைவேற்றினார்.
2) அன்பு:
தேவன் தான் அன்பின் ஆதாரம், ஏனெனில் அவர் தான் நம்மை முதலில் நேசித்தார் (1 யோவான் 4:19). தேவனுடைய அன்பின் உயரம், ஆழம், அகலம் அல்லது நீளம் எதையும் நம்மால் அளவிட முடியாது (எபேசியர் 3:18). தேவனுடைய அன்பை விவரிக்கவே இயலாது, மனிதர்களுக்கிடையேயான அன்பு உணர்ச்சி கொந்தளிப்பால் ஏற்படுவதாகும்.
3) ஜீவன்:
"தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" (யோவான் 3:16). ஆம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இல்லாமல் வாழ்க்கை இல்லை (ஜீவனேது).
4) பிரசங்கம்:
கிறிஸ்தவ பிரசங்கத்தின் கருப்பொருள், ஆரம்பம் மற்றும் முடிவு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தான். நற்செய்தி அறிவிப்பு என்பது கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை பிரகடனப்படுத்துவதாக பவுல் வலியுறுத்துகிறார் (1 கொரிந்தியர் 1:23).
5) சிருஷ்டிப்பு:
திரியேக தேவன் உலகம் முழுவதையும் படைத்தார். சகலமும் அவருக்குள் அவருக்காகவும் சிருஷ்டிக்கப்பட்டது (கொலோசெயர் 1:16). அவருடன் போட்டியிடக்கூடிய படைப்பாளிகள் வேறு யாரும் இல்லை.
6) வெளிப்பாடு:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தேவனின் சாயலாகவும், தன்மையின் சொரூபமூமாயிருக்கிறார் மற்றும் தேவனை இறுதியில் வெளிப்படுத்துகிறவருமாய் இருக்கிறார் (எபிரெயர் 1: 2-3).
7) விசுவாசம்:
கர்த்தராகிய இயேசு நம் விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாய் இருக்கிறார் (எபிரெயர் 12:22). தேவனுடைய வார்த்தையைக் கேட்பதன் மூலம் விசுவாசம் வருகிறது (ரோமர் 10:17).
ஆண்டவராகிய இயேசுவை, முதலும் அவரே முடிவும் அவரே என்று நான் புரிந்துகொள்கிறேனா?
Author: Rev. Dr. J. N. Manokaran
"இருக்கிறவரும் இருந்தவரும் இனிவருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்" (வெளிப்படுத்துதல் 1:8). தேவன் அல்பா மற்றும் ஒமெகாவைப் பற்றி பேசவில்லையா? காண்கின்றதற்கும் காணப்படாததற்கும் அல்பா ஆரம்பம். ஒமெகா வரலாற்றின் முடிவைக் குறிக்கிறது.
1) இரட்சிப்பு:
கர்த்தர் முதலில் நம்மை நேசித்தது தான் ஆரம்பம். "அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை" (அப்போஸ்தலர் 4:12).
2) அன்பு:
ஆதாமையும் ஏவாளையும் உருவாக்குவதன் மூலம் தேவன் தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார், மேலும் ஜனங்களை இரட்சிப்பிற்கு நேராக வழிநடத்துவதற்காக கலகக்கார மனிதகுலத்துடன் தொடர்ந்து பணியாற்றினார். நாம் பாவிகளாகவும், பலவீனமானவராகவும், கலகக்காரராகவும், கீழ்ப்படியாதவர்களாகவும், தேவபக்தியற்றவர்களாகவும், தேவனுக்கு விரோதிகளாகவும் இருந்தபோதும் தேவன் தம் அன்பை விளங்கப்பணணுகிறார் (ரோமர் 5:6-10).
3) நோக்கம் மற்றும் பொருள்:
மனிதர்கள் தேவ மகிமைக்காகப் படைக்கப்பட்டுள்ளனர். அவரை அறிவது என்பது ஒரு நபர் தான் வாழ்வதற்கான அர்த்தத்தைக் கண்டறியவும் மற்றும் அவன்/அவள் வாழ்க்கைக்கான நோக்கம் அல்லது திட்டம் அறிய உதவுகிறது. தேவன் தனது மகிமைக்காக மனிதர்களைப் படைத்தார் (ஏசாயா 43:7). உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் சிருஷ்டிகரான தேவன் ஒரு நோக்கமும் திட்டமும் வைத்திருக்கிறார். இதை அறிய, தேவ சித்தமே உண்மையான ஞானம்.
4) பிரசங்கம்:
தேவன் தம் சபையை நற்செய்தியைப் பிரசங்கிக்க அல்லது பிரச்சாரம் செய்ய அழைத்துள்ளார். நற்செய்தியின் இதயம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பிரசங்கிக்காமல் கிறிஸ்தவ பிரசங்கம் முழுமையடையாது.
5) சிருஷ்டிப்பு:
திரியேக தேவன் ஒன்றுமில்லாமையில் இருந்து அனைத்தையும்உருவாக்கினார். வேறெவராலும் ஒன்றுமில்லாததிலிருந்து எதையும் உருவாக்க முடியாது. துரதிர்ஷ்டவசமாக, இல்லாமை தத்துவம் எதிலுமே நம்பிக்கையின்மைமைப் பேசுகிறது மற்றும் எல்லாமே ஒன்றுமில்லாமல் போய்விடும் என்கிறது.
6) வெளிப்படுத்துதல்:
தேவன் தனது சிருஷ்டிப்பின் மூலம் தன்னை வெளிப்படுத்தியுள்ளார் (ரோமர் 1:20). அப்படியானால், தேவன் தம்முடைய வார்த்தையின் மூலம் தம்மை வெளிப்படுத்த கிருபையாக இருக்கிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மனிதகுலத்திற்கான இறுதி வெளிப்பாடு (எபிரெயர் 1: 1-2). இவைகளைத் தவிர, மனிதகுலத்திற்கு தேவனை வெளிப்படுத்தும் எந்த வெளிப்பாடும் இல்லை அல்லது தரிசனமும் இல்லை.
7) நமது விசுவாசம்:
தேவனே நம் விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார் மற்றும் அதை சரியாக செயல்படுத்துகிறவரும் அவரே (எபிரெயர் 12:2). விசுவாசம் என்பது பரிசுத்த ஆவியின் வரம் (கலாத்தியர் 5:22-23).
நான் தேவன் அல்பாவும் ஒமெகாவும் என்பதை புரிந்துகொள்கிறேனா?
Author : Rev. Dr. J. N. Manokaran