1. பாவத்தை விட்டுவிடுங்கள்
எபிரெயர் 12:1 நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தைத் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடு ஓடக்கட...
நீதிமொழிகள் 28:13 தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட் டான்; அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.
2. கோபத்தை விட்டுவிடுங்கள்
சங்கீதம் 37:7-9 கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு; பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்
(சினம்கொள்ளாதே; வெகுண்டெழுவதை விட்டுவிடு; எரிச்சலடையாதே; அதனால் தீமைதான் விளையும்)
அப்போஸ்தலர் 15:35-41 பவுலும் பர்னபாவும்- அவர்களுக்குள்ளே கடுங்கோப மூண்டபடியினால் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தார்கள்.
3. துர்க்குணத்தை விட்டுவிடுங்கள்
அப்போஸ்தலர் 8:18-24 நீ (மாயவித்தைக்காரனாகிய சீமோன்) உன் துர்க் குணத்தைவிட்டு மனந்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்;
2சாமுவேல் 22:19-27; சங்கீதம் 18:23 அவர் முன்பாக மன உண்மை யாயிருந்து, என் துர்க்குணத்திற்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்
எபேசியர் 4:29-32 சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது
யாக்கோபு 1:19-22நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க் குணத்தை ஒழித்துவிட்டு... வசனத்தை சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள்
4. சண்டையை விட்டுவிடுங்கள்
நீதிமொழிகள் 7:14 சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறது போல் இருக்கும்; ஆதலால் விவாதம் எழும்பும்முன் அதை விட்டுவிடு.
நீதிமொழிகள் 15:18 கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்
நீதிமொழிகள் 30:33 கோபத்தைக் கிண்டிவிடுதல் சண்டையை பிறப்பிக்கும்
5. கடுஞ்சொல்லை விட்டுவிடுங்கள்
எபேசியர் 6:9 எஜமான்களே, அப்படியே நீங்களும் வேலைக்காரருக்குச் செய்ய வேண்டியவைகளைச் செய்து, அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறாரென்றும், அவரிடத்தில் பட்ச பாதமில்லையென்றும் அறிந்து, கடுஞ்சொல்லை விட்டுவிடுங்கள்.
Author: Rev. M. Arul Doss