உலகெங்கிலும் உள்ள பல நகரங்கள் நடைப்பயிற்சி மற்றும் மென்னோட்டத்திற்காக நடைப் பாதைகளை உருவாக்கி வருகின்றன. கர்த்தர் ஆபிரகாமை தனக்கு முன்பாக நடக்கக் கட்டளையிட்டார் (ஆதியாகமம் 17:1-2). இது உடற்பயிற்சிக்கான நடை அல்ல, மாறாக ஒரு வாழ்க்கை முறை. நேரத்தையும் வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்தி, ஞானமாக நடக்க வேண்டும் என்று பவுல் எழுதுகிறார் (எபேசியர் 5:15-17).
நண்பர்கள் முன்பாக நடக்க வேண்டாம்:
சகாக்களின் செல்வாக்கு பதின்வயதினர் மீது செலுத்தப்படுகிறது, மேலும் அவர்கள் தங்கள் நண்பர்களின் அங்கீகாரத்தை விரும்புகிறார்கள். நண்பர்கள் தீயவர்களாக இருந்தால், சகாக்களின் ஆளுகை ஆபத்தானது. சிலர் சமூக ஊடகங்களில் ஆன்லைன் நண்பர்களிடமிருந்து அதிக எண்ணிக்கையிலான விருப்பங்களைப் (likes) பெற முயற்சி செய்கிறார்கள்.
குடும்பத்தின் முன்பாக நடக்க வேண்டாம்:
ஒரு புதிய விசுவாசிக்கு திருமணமாகின்றது; அப்பெண் வேதாகமத்தின் படி வாழ விரும்புகிறார். இருப்பினும், ஒழுங்கும் கிரமுமாக வேதாகமத்தைப் படிக்காத, ஜெபம் செய்யாத அல்லது சபைக்குச் செல்லாத அவளது மாமியார், சில பெயர் கிறிஸ்தவர்கள் அப்பெண்ணை சபைக்கு செல்ல வேண்டாம் என்று அழுத்தம் கொடுக்கிறார்கள், அவர்களைப் பொறுத்தவரை அது நேரத்தை வீணடிப்பதாக இருந்தது. இருப்பினும், அவள் குடும்ப உறுப்பினர்களைப் பிரியப்படுத்தாமல், தேவனுக்கு முன்பாக நடக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தாள்.
இனத்தின் முன்பாக நடக்க வேண்டாம்:
சாதி, குலம், வர்க்கம் மற்றும் சக ஊழியர்கள் போன்ற பல சமூக முறைகள் உள்ளன, அதில் ஒரு நபர் என்பது ஒரு பகுதி. ஒவ்வொரு குழுவிற்கும் தனித்துவமான மரபுகள் மற்றும் கலாச்சார நடைமுறைகள் இருக்கலாம். எடுத்துக்காட்டாக, நைட்டிங்கேல் உறுதிமொழியை செவிலியர்கள் தங்கள் பட்டப்படிப்பு முடித்து சான்றிதழ்களைப் பெறும்போது பயன்படுத்தப்படுவது ஒரு நல்ல பாரம்பரியமாகும். ஆனால் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களை ராகிங் செய்யும் தீய பாரம்பரியம் பாவம் அல்லவா.
சமூகத்தின் முன்பாக நடக்க வேண்டாம்:
சிலர் சமூகத்தின் அங்கீகாரத்திற்காக வாழ்கிறார்கள். இருப்பினும், ஒவ்வொரு சமூகமும் சில வகையான சமூக பாவங்களை பொறுத்துக்கொள்கிறது. திருமண விழாவுக்கான ஆடம்பரச் செலவுகள் சமூகக் கேடடல்லவா. ஏழைகள் கூட பணக்கார வாழ்க்கை முறையைப் பின்பற்றி வாழ்நாள் முழுவதும் கடன்களில் விழுகிறார்கள்.
அரசாங்கத்தின் முன்பாக நடக்க வேண்டாம்:
சில அரசாங்கங்கள் தங்கள் குடிமக்களுக்கு சுதந்திரத்தை மறுக்கின்றன, அவர்கள் தேவனின் சீஷர்களாக இருக்க முடியாது. அப்படியானால், மனிதர்களைக் காட்டிலும் தேவனுக்கு கீழ்ப்படிவது நல்லது (அப்போஸ்தலர் 5:29).
கர்த்தருக்கு முன்பாக நடங்கள்:
இதுவே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுக்கான அழைப்பு. அதாவது ஒளி, உண்மை, வாழ்க்கை, தேவ வார்த்தை, அன்பு மற்றும் நீதியில் நடப்பது ஆகும். ஒரு சீஷன் தேவனின் மகிமைக்காக எல்லாவற்றையும் செய்ய வேண்டும் (1 கொரிந்தியர் 10:31).
நான் கர்த்தருக்கு முன்பாக நடக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்