பொதுவாக, வரலாறு என்பது வெறுப்பு, வன்முறை, போர்கள், ஒடுக்குமுறை மற்றும் இரத்தக்களரி ஆகியவற்றின் ஆவணமாகும். புத்திசாலியான ஒரு குழு அல்லது சக்தி வாய்ந்த ஒரு குழு அல்லது இரண்டும் ஒருங்கிணைந்தோ மற்றவர்களை ஆதிக்கம் செலுத்துவார்கள். “எகிப்தியர்கள் எங்களைச் சிறுமைப்படுத்தி, எங்களை அடிமைகளாக்கினார்கள். எங்களை வேதனைப்படுத்தி மிகவும் கடினமான வேலைகளைச் செய்யும்படி கட்டாயப்படுத்தினார்கள்” என இஸ்ரவேலர்கள் புரிந்துகொண்டார்கள்.
கடுமையான சிகிச்சை:
எகிப்தியர்கள் தாங்கள் மற்றவர்களை விட சிறந்தவர்கள் என்று நினைத்தார்கள். எகிப்தியர்கள் மட்டுமல்ல, ரோமானியர்கள், கிரேக்கர்கள், யூதர்கள் மற்றும் பலர் இதேபோன்ற உயர்வான மனப்பான்மையைக் கொண்டிருந்தனர். இதற்கு அவர்களின் கூற்று மதம், அரசியல், அறிவுசார், தத்துவம், பொருள் வளம், இராணுவ வலிமை.... முதலியனவாகும். எனவே, மற்றவர்களிடம் அவர்களின் அணுகுமுறை எப்போதும் கடுமையாக இருந்தது. அவர்களின் உலகக் கண்ணோட்டத்தில், மற்றவர்கள் சமமாக நடத்தப்படுவதற்கு தகுதியற்றவர்கள் என நினைப்பதுண்டு. துரதிர்ஷ்டவசமாக, உங்களைப் போலவே உங்கள் அண்டை வீட்டாரையும் நேசியுங்கள் என்ற இராஜரீக பிரமாணம் அவர்களுக்கு தெரியாது; எனவே, அவர்கள் மற்றவர்களை வெறுக்கிறார்கள் அவர்களை எதிரிகள் மற்றும் அடிமைகள் என்று கருதுகிறார்கள்.
அவமானம்:
கடுமையான சிகிச்சை மற்றும் அன்பின்மை ஆகியவை பிரச்சினைகள் மட்டுமல்ல. ஆதிக்கம் செலுத்துபவர்கள் எப்பொழுதும், குறைந்த அதிர்ஷ்டம் உள்ளவர்களிடம் இருந்து அவர்களின் கண்ணியத்தை பறிப்பார்கள். நல்வாஞ்சைகள், கனவு கண்ட வாழ்வு அல்லது வாழ்க்கை என எல்லா ஆசைகளும் அழிக்கப்படுகிறது. எப்படியாவது இந்த அடிமைகள் தப்பிப்பிழைக்கிறார்கள், அதை தங்கள் விதி அல்லது கர்மாவாக ஏற்றுக்கொள்கிறார்கள். பெரும்பாலான மக்கள் சுதந்திரம் அல்லது கண்ணியம் பற்றி கனவு கூட காண முடியாது. ஆம், தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் இழிவாக நடத்தப்படுகிறார்கள் மற்றும் சமூகத்திற்கு ஏதோ கந்தலானவர்கள் அல்லது மாசுபடுத்தப்பட்டவர்கள் என்பதாக அழைக்கப்படுகிறார்கள்.
கடின உழைப்பு:
அடிமைகள் கடின உழைப்பில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்: சுத்தமற்ற இடங்களிலும், கடினமான மற்றும் ஆபத்தான வேலைகளிலும் மற்றும் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் சுரண்டப்படுகிறார்கள். இவர்களின் சொற்ப வருமானம் குடும்ப வாழ்க்கைக்கு கூட போதாது. எனவே, தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதன் மூலம் அவர்களின் எதிர்காலத்தில் மாற்றத்தை ஏற்படுத்த கூட முடியாது. அவர்களின் எதிர்காலத்தை அழிக்க குழந்தைகளை அல்லது மனைவி உட்பட முழு குடும்பத்தையும் கூட ஈடுபடுத்துவதில் ஆளும் மக்கள் புத்திசாலிகள். இஸ்ரவேல் புத்திரர் செங்கற்களை உருவாக்க நிர்பந்திக்கப்பட்டனர், அவர்களுக்காக நகரங்களையும் பிரமிடுகளையும் கட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஆண்டவரிடம் மன்றாடுங்கள்:
இஸ்ரவேல் புத்திரர் அழுது, புலம்பி, கர்த்தரிடம் ஜெபம் செய்தார்கள். தம் இரக்கத்தில், மோசேயை அனுப்புவதன் மூலம் தேவன் அவர்களை விடுவித்தார். வரலாறு முழுவதும், தேவன் சுவிசேஷத்தின் மூலம் பல குழுக்களை விடுவிக்க மிஷனரிகளை அனுப்பினார். நற்செய்திக்கு பதிலளித்த மக்கள் ஆவிக்குரிய ரீதியில் மட்டுமல்ல, சமூக மற்றும் அரசியல் ரீதியாகவும் விடுவிக்கப்பட்டனர்.
இக்கட்டான சூழ்நிலைகளில் நான் விசுவாசத்துடன் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்