பிரதான ஆசாரியரின் ஜெபம் அல்லது பிரியாவிடை ஜெபம் யோவான் 17 ம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது (யோவான் 17: 1-26). இது இயேசு கிறிஸ்துவின் மிக நீண்ட ஜெபமாகும், அவர் தம்முடைய சீஷர்களுடனான சந்திப்பை மேல் அறையில் முடித்தார். இது தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் கர்த்தராகிய இயேசுவின் பரிந்துரையைப் பற்றிய நுண்ணறிவையும் வழங்குகிறது (எபிரெயர் 7:25; கொலோசெயர் 3:1).
1) மகிமைப்படுத்துதல் (யோவான் 17:1-5):
இந்த பூமியில் பணி முடிந்ததன் அடிப்படையில் இயேசு தம் மகிமைக்காக ஜெபித்தார். கிருபை, சத்தியம், மகிமை ஆகியவற்றை உலகிற்குக் காண்பிப்பதற்காக இயேசு கிறிஸ்து தனது பணியை முடித்திருந்தார். மெல்கிசேதேக்கின் வரிசையில் ஒரு ஆசாரியர் பரலோகத்திற்கு ஏறி, பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றியிருக்கப்படியால், ஆண்டவர் மீண்டும் மகிமைப்படுத்தப்பட்டார் (எபிரெயர் 10:19).
2) சீஷர்களுக்கான பரிந்துரை (6-10):
சீஷர்களிடம் வார்த்தையை அளித்ததாக பிதாவாகிய தேவனிடம் சொல்லி ஜெபித்தார். இயேசு பிதாவுக்கு சொந்தமானவர் என்பதால், சீஷர்களும் அவருக்கே உரியவர்கள். கர்த்தராகிய இயேசு தம்முடைய சீஷர்கள் மூலமாக மகிமைப்படுகிறார்.
3) பாதுகாத்தல் மற்றும் பரிசுத்தமாக்குதல் (11-19):
'கேட்டின் மகன்’ யூதாஸைத் தவிர மற்ற எல்லா சீஷர்களையும் காத்துக் கொள்ளும்படி கர்த்தராகிய இயேசு ஜெபித்தார். சீஷர்களைப் பாதுகாக்க தேவன் ஜெபம் செய்தார். மேலும், அவர் தம்முடைய வார்த்தையின் மூலம் சீஷர்களைப் பரிசுத்தப்படுத்தும்படி ஜெபித்தார். தேவன் பாதுகாக்கின்றார் மற்றும் பரிசுத்தப்படுத்துகிறார் என அறிவது நமக்கு புத்துணர்வும் ஊக்கமும் அளிக்கின்றது.
4) ஐக்கியத்திற்கான மனு (17:20-23):
பிதாவும் கிறிஸ்துவும் ஒன்றாக இருப்பதால் சீஷர்களின் ஒற்றுமைக்காக இயேசு ஜெபித்தார். உலகில் நாம் பல பிரிவினைகளைக் காண்கிறோம், ஒருவருக்கொருவர் சண்டையிடுவது நம் தேவனை வருத்தப்படுத்தும் அல்லவா! இருப்பினும், தேவன் வரும்போது, நாம் அனைவரும் ஒன்றாய் இருப்போம்.
5) ஒற்றுமை மற்றும் ஐக்கியம் (17:24-26):
உலகம் பிதாவை அறியவில்லை, ஆனால் குமாரன் பிதாவை அறிவார். பிதா குமாரனை அனுப்பியதை சீஷர்கள் அறிவார்கள். பிதாவே சீஷர்களுக்கும் உலகிற்கும் கிறிஸ்துவை தெரியப்படுத்தினார், தொடர்ந்து வெளிப்படுத்துகிறார், இதனால் பிதாவின் அன்பு சீஷர்களிடையே வெளிப்படும். மேலும் பலரை தங்கள் சொந்த சூழலிலும் அதற்கு அப்பாலும் சீஷராக்குவதில் ஈடுபட இது கட்டளையிடுகிறது.
இந்த பதிலளிக்கப்பட்ட பிரதான ஆசாரியருடைய ஜெபத்தின் ஒரு அங்கமாக நான் இருக்கிறேனா? என சிந்திப்போம்.
Rev. Dr. J. N. Manokaran