மோசே எழுதிய பாடல்கள் குறைந்தது மூன்று உள்ளன. ஒன்று எகிப்திய இராணுவத்தின் மீது இஸ்ரவேலுக்கு தேவன் அளித்த வெற்றிக்கு பிறகு; மற்றொன்று இஸ்ரவேலுக்குப் போதிக்கும் பாடல் மற்றும் முதுமையடைதல் பற்றிய அவரது பிரதிபலிப்பு (யாத்திராகமம் 15:1-8; உபாகமம் 32:1-43; சங்கீதம் 90). வெளிப்படுத்துதலில், மோசேயின் பாடல் குறிப்பிடப்பட்டுள்ளது (வெளிப்படுத்துதல் 15:3). மோசேயின் வெற்றிப் பாடலில் ஐந்து பத்திகள் உள்ளன.
முதல் பகுதி: (யாத்திராகமம் 15:1-5)
மீட்பும் வெற்றியும் மோசே மற்றும் இஸ்ரவேல் புத்திரரிடமிருந்து உடனியல்பான பதிலைக் கொண்டுவருகின்றன. அவர்கள் தேவ சமூகத்தில் பாடினர். இது ஒரு புதிய பாடலாக இருந்தது. முதல் பாடல் வேதத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது. "நான் கர்த்தரைப் பாடுவேன்" என்பது சபை ஆராதனைகளில் மிக முக்கியமானது. தேவனே நம் பார்வையாளர், நம்மைச் சுற்றியுள்ளவர்கள் அல்லது ஊடக பார்வையாளர்கள் அல்ல. இது சங்கீதத்தில் குறைந்தது மூன்று முறை திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. யுத்தத்தில் வல்லவரால் மட்டுமே அதைச் செய்ய முடியும்; அவர் குதிரையையும் குதிரை வீரனையும் கடலிலே தள்ளினார். தேவனே விசுவாசிகளின் பெலனாகவும் பாடலாகவும் இருக்கிறார். தேவ பலத்தால் வெற்றி பெற்றதால் பாடல் வருகிறது. உண்மையில் தேவனே நம் இரட்சிப்பு.
இரண்டாம் பகுதி: (யாத்திராகமம் 15:6-10)
தேவ கரம் எதிரிகளை நொறுக்கி விட்டது என்று மோசே பாடினார். நாம் தேவனை நேசிக்கும்போது, எதிரிகள் தோல்வியடைவதும், நமக்காக தேவன் செய்த காரியங்களில் தேவனை மகிமைப்படுத்துவதும் சாத்தியமாகும். வலது கை, திறமை மற்றும் வல்லமையின் கை என்று கருதப்பட்டது. வலது கை பேச்சு உருவம், அது ஐம்பது முறைக்கு மேல் பயன்படுத்தப்படுகிறது. பார்வோனின் தோல்வி அனைத்தும் தீய சக்திகளின் தோல்வியைக் குறிக்கிறது.
மூன்றாவது பகுதி: (யாத்திராகமம் 15:11-13)
உமக்கு ஒப்பான தேவன் யார்? எகிப்து அல்லது கானானின் பொய்க் கடவுள்களைப் போலான தேவன் இல்லை என்று இஸ்ரவேல் பாடியது என்பது தேவன் எல்லாவற்றையும் விட பெரியவர் மற்றும் உயர்ந்தவர்.
நான்காவது பகுதி: (யாத்திராகமம் 15:14-16)
வெற்றிச் செய்தி மற்ற நாடுகளைப் பாதிக்கும். கானானில் வசிப்பவர்கள் தத்தளிப்பார்கள், அதாவது திகைத்துப் போவார்கள். நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகும், ராகாப் இந்த வரலாற்று நிகழ்வை நினைவு கூர்ந்தாள் அல்லவா (யோசுவா 2:10). பெலிஸ்தர்கள் கூட 400 ஆண்டுகளுக்குப் பிறகும் நினைவு கூர்ந்தனர் (1 சாமுவேல் 4:7-9).
ஐந்தாம் பகுதி: (யாத்திராகமம் 15:16-18)
தேவ பிள்ளைகள் மீட்கப்பட்ட ஜனங்கள் என்று மோசே பாடுகிறார். அவர்களை அழைத்து வந்து சுதந்தரத்தின் பர்வதத்திலும், ஆண்டவராகிய தேவரீருடைய கரங்கள் ஸ்தாபித்த பரிசுத்த ஸ்தலத்திலும் அவர்களை நாட்டுவீர் என்கிறார். "கர்த்தர் சதாகாலங்களாகிய என்றென்றைக்கும் ராஜரிகம்பண்ணுவார்" (யாத்திராகமம் 15 : 18). ஆம், தேவன் அவர்கள் நடுவே வாசம் செய்வார். கர்த்தர் என்றென்றும் ஆட்சி செய்வார்.
நான் தேவனைக் குறித்து பாடி மகிழ்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்